Avantika Sundar Attacker
கோலிவுட் செய்திகள்

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் குஷ்பு மகள்! | Avantika Sundar | Khushbu

`அட்டாக்கர்', தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதானமாக கொண்டு உருவாகும் முதல் திரைப்படம்.

Johnson

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தம்பதி சுந்தர் சி - குஷ்பூ. இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகளான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவரின் `பொன்னியின் செல்வன்', `பொன்னியின் செல்வன் 2' மற்றும் `தக் லைஃப்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். மூத்த மகளான அவந்திகா நடிகையாக அறிமுகமாகிறார்.

சுஜேஷ் இயக்கும் மலையாளப் படமான `ஆரம்பம்' படத்தின் மூலம் அவந்திகா நடிகையாக அறிமுகமான நிலையில், தமிழ் சினிமாவில் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதற்குப் பதில் கிடைத்துள்ளது. `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான பவிஷ் நடிப்பில் உருவாகும் ’அட்டாக்கர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறார் அவந்திகா. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக  இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

வாலிபால் விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாசார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகிவரும் `அட்டாக்கர்', தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதானமாக கொண்டு உருவாகும் முதல் திரைப்படம். திரைப்படத்திற்கு மேலும் நம்பகத்தன்மை சேர்க்கும் வகையில், இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Avantika Sundar

மேலும், முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் உள்ளிட்ட நடிகர்கள், தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது `அட்டாக்கர்' படப்பிடிப்பு தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளில் நடைபெற உள்ளது.