Kasthuri Raja X
கோலிவுட் செய்திகள்

”காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல்” - கஸ்தூரிராஜா சர்ச்சை பேச்சு!

படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ, கல்யாணம் என்ற நிலை வரும் போது அப்பா அம்மாவிடம் விடு.

Johnson

அக்னி சிறகுகள் கல்வி அறக்கட்டளையின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான கஸ்தூரி ராஜா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது "இன்றைய பிள்ளைகள் படிப்பு, காதல் அதன் பின் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். நேற்று கூட செய்தியில் கவின் என்பவர் கொலை செய்யப்பட செய்தியை பார்த்தேன். அந்தப் பையன் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து, உத்தியோகத்துக்கு போன பையன். யாரை குறை சொல்வது? யாரையும் சொல்ல முடியாது. அந்த துர் மரணத்திற்கு ஒரே காரணம், காதல் என்று சொல்லப்படும் கொடிய செயல் தான். 

படிக்கப்போனால் படி, வேலைக்கு போனால் வேலைக்கு போ. கல்யாணம் என்ற நிலை வரும் போது அப்பா அம்மாவிடம் விடு. உனக்கு வேண்டியதை எல்லாம் பார்த்து பார்த்து செய்பவர்கள். அவர்களின் வலியை இன்றைய பிள்ளைகள் உணர்வதில்லை. உங்களுக்கு ஒரு நல்ல கல்யாணம் செய்து வைக்க அந்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா?

காதல் தப்பு என சொல்லவில்லை. எனக்கு 20 வயதுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது, என் மனைவிக்கு அப்போது 15 வயதுதான். கிட்டத்தட்ட அது செல்லாத கல்யாணம் தான். அதற்கு முன்பு காதல் வந்தது, எனவே படிப்பு தடம் புரண்டது. டிகிரியை முடிக்காமல் போனதற்கு ஒரே காரணம் காதல் தான். நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு எதுவெல்லாம் ஆதரவாக இருக்கிறதோ அது எல்லாம் தான் காதல். உன் வாழ்க்கையை பின்னுக்கு இழுக்கும் எதுவும் காதல் கிடையாது. காதல் எந்த வயதிலும் வரும், ஆனால் கொஞ்சம் காத்திருங்கள்." என்றார்.