Karthi Vaa Vaathiyaar
கோலிவுட் செய்திகள்

தியேட்டரில் நீக்கம்.. இரு வாரங்களில் ஓடிடி ரிலீஸ்! | Vaa Vaathiyaar | Karthi | Nalan Kumarasamy

எம்ஜிஆர் பாத்திரத்தை ஒரு சூப்பர் ஹீரோபோல வடிவமைத்து, இப்படத்தை வித்தியாசமாக செய்திருந்தார் நலன் குமாரசாமி.

Johnson

கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கி பொங்கல் வெளியீடாக ஜனவரி 14ஆம் தேதி வெளியான படம் `வா வாத்தியார்'. கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், ஜிஎம் சுந்தர் எனப் பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

எம்ஜிஆர் பாத்திரத்தை ஒரு சூப்பர் ஹீரோபோல வடிவமைத்து, இப்படத்தை வித்தியாசமாக செய்திருந்தார் நலன் குமாரசாமி. திரையரங்கில் இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. பார்வையாளர்களைப் படம் பெரியளவில் கவராததால், இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இந்தப் படத்திற்கு பதிலாக வேறு படங்களை திரையிட்டனர். இப்போது எந்த திரையரங்கிலும் படம் ஓடவில்லை. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 28ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் `வா வாத்தியார்' வெளியாகிறது. திரையரங்கில் வெளியான இரு வாரங்களில் ஓடிடியில் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.