Karuppu, Disclosure Day, Main Vaapas Aavunga This Weeks Release
கோலிவுட் செய்திகள்

`கருப்பு' to ஸ்பீல்பெர்க்கின் `Disclosure Day'... இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள `Disclosure Day', ஓடிடியில் சூர்யாவின் `கருப்பு' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Every Year After (English) Prime - June 10

Every Year After

Sadie Soverall, Matt Cornett நடித்துள்ள சீரிஸ் `Every Year After'. இரு நண்பர்களின் காதல் குறித்த ஆராய்ச்சிகளே கதை.

Raakh (Hindi) Prime - June 12

Raakh

வீர் தாஸ், ரிச்சா சத்தா நடித்துள்ள சீரிஸ் `Raakh'. இரு பதின் பருவத்தினர் காணாமல் போனபின், காவல்துறையினரின் தேடுதல் படலமே கதை.

Post Theatrical Digital Streaming: Bhooth Bangla (Hindi) Netflix - June 12

Bhooth Bangla

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் `Bhooth Bangla'. தன் குடும்பத்துக்குச் சொந்தமான அரண்மனையில் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார் ஹீரோ. அதில் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.

Karuppu (Tamil) Prime - June 12

Karuppu

சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. அநீதிக்கு எதிராக நீதிப் போராட்டத்தை நடத்தும் ஹீரோவின் கதை.

Dridam (Telugu) Jio Hotstar - June 12

Dridam

ஷேன் நிகம் நடித்துள்ள படம் `Dridam'. மலைப்பிரதேசம் ஒன்றில் பொறுப்பேற்கும் இளம் காவலதிகாரி எதிர்கொள்ளும் சவால்களே கதை.

Ramani Kalyanam (Telugu) Sun NXT - June 12

Ramani Kalyanam

விஜய் ஆதிரெட்டி இயக்கிய படம் `Ramani Kalyanam'. பார்வை சவால் கொண்ட பெண் எதிர்கொள்ளும் சிக்கல்களே கதை.

Over Your Dead Body (English) Prime - June 12

Over Your Dead Body

Jason Segel, Samara Weaving நடித்த படம் `Over Your Dead Body'. தங்கள் உறவு சிக்கலைப் பேசித் தீர்க்க தனித்த இடத்திற்கு வருகிறார்கள் ஒரு தம்பதி. அங்கு நடக்கும் பிரச்னைகள் என்ன என்பதே கதை.

Theatre: Habeebi (Tamil) - June 12

Habeebi

மீரா கதிரவன் இயக்கியுள்ள படம் `ஹபீபி'. இஸ்லாமிய குடும்பம் ஒன்றின் வாழ்க்கையும், அது சார்ந்த சிக்கல்களுமே கதைக்களம்.

Charukesi (Tamil) - June 12

Charukesi

சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் `சாருகேசி'. பிரபல கர்நாடக பாடகர் ஒருவருக்கு அல்சைமர் வியாதி வந்த பின்னர் நடக்கும் விஷயங்களே கதை.

Moondram Kan (Tamil) - June 12

Moondram Kan

விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் `மூன்றாம் கண்'. நிறுவனத்தின் மேலாளர் கொலை செய்யப்பட, அதை யார் செய்தது என்ற விசாரணைகளே கதை.

Valluvan (Tamil) - June 12

Valluvan

சீனு, ஆஷ்னா நடித்துள்ள படம் `வள்ளுவன்'. கொலையை திட்டமிட்டு அதை காவல்துறைக்கும் சொல்லிவிட்டு செய்யும் ஒரு கொலைகாரனை துரத்துவதே கதை.

Nizhal (Tamil) - June 12

Nizhal

குமார் இயக்கியுள்ள படம் `நிழல்'. கொடூர கொலைக்கு சாட்சியாகும் இரட்டைச் சகோதரிகள் பற்றிய கதை.

Aatti (Tamil) - June 12

Aatti

கிட்டு இயக்கியுள்ள படம் `ஆட்டி'. தேயிலைத் தோட்டத்தில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பெண்ணுக்கு நிகழும் அநீதியும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளுமே கதை.

Sing Geetham (Telugu) - June 12

Sing Geetham

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ள படம் `Sing Geetham'. கிராமத்தினர் அனைவருக்கும் பேச்சுக்குப் பதில் பாட மட்டுமே வரும் என்ற சாபம் விழ அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே கதை.

Bharat Bhhagya Viddhaata (Hindi) - June 12

Bharat Bhhagya Viddhaata

கங்கனா ரனாவத் நடித்துள்ள படம் `Bharat Bhhagya Viddhaata'. மும்பை தாக்குதல் சமயத்தில் மருத்துவமனை ஒன்றில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்.

Main Vaapas Aaunga (Hindi) - June 12

Main Vaapas Aaunga

இம்தியாஸ் அலி இயக்கியுள்ள படம் `Main Vaapas Aaunga'. பால்ய காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தொலைத்த காதலைத் தேடி பாகிஸ்தான் செல்லும் முதியவரின் கதை.

Governor (Hindi) - June 12

Governor

மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள படம் `Governor'. 90களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பணியமர்த்தப்படும் ரமணன் என்ன செய்கிறார் என்ற நிஜ சம்பவத்தை மையப்படுத்திய கதை.

Backrooms (English) - June 12

Backrooms

Kane Parsons இயக்கியுள்ள படம் `Backrooms'. மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெறும் நபர் அமானுஷ்ய இடத்தில் சிக்கிக் கொண்டபின் என்ன நடக்கிறது என்பதே கதை.

Scary Movie (English) - June 12

Scary Movie

Michael Tiddes இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Scary Movie'. இது இந்த பட வரிசையில் ஆறாவது பாகமாக வெளியாகிறது. நண்பர்கள் கூடும்பொழுதில் சீரியல் கில்லர் திரும்ப வந்த பின்னர் என்ன ஆனது என்பதே கதை.

Disclosure Day (English) - June 12

Disclosure Day

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள படம் `Disclosure Day'. மனிதர்களை கட்டுப்படுத்தும் ஒரு சக்தியை எதிர்கொள்வது பற்றிய கதை.