ஸ்ரீகாந்த், முகேஷ் ரிஷி நடித்துள்ள சீரிஸ் `Objection My Lord'. வழக்கறிஞர் பரசுராம் மகளை மீட்கப் போராடும் ஒரு தந்தையின் வழக்கை எடுத்து நடத்துவதே கதை.
Jeff Wadlow இயக்கியுள்ள படம் `The Devil's Mouth' தாயலாந்து சுற்றுலா செல்லும் நண்பர்கள் ஓர் ஆபத்தில் சிக்கிக்கொண்டு தப்புவதே கதை.
மதுபாலா, இந்திரன்ஸ் நடித்த படம் `Chinna Chinna Aasai'. காசிக்குச் செல்லும் பயணி ஒருவரின் அனுபவங்களே கதை.
David Frankel இயக்கத்தில் Meryl Streep, Anne Hathaway, Emily Blunt நடித்துள்ள படம் `The Devil Wears Prada 2'. கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக ஃபேஷன் உலகில் நடக்கும் மோதல்களை மையப்படுத்தியது.
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம் `கட்டா குஸ்தி 2'. ஹவுஸ் ஹஸ்பெண்ட் ஆக மாறிய நாயகனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.
பவிஷ், நாக துர்கா நடித்த படம் `லவ் ஓ லவ்'. காதலால் கடன்காரனாகும் ஓர் இளைஞனின் கதை.
வெங்கடேஷ் மகா இயக்கத்தில் சத்யா தேவ் நடித்த படம் `Rao Bahadur'. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள படம் `Deewana'. அம்மு என்ற பெண் மீது காதல் கொள்ளும் இளைஞனின் கதை.
சிதம்பரம் இயக்கிய படம் `Balan The Boy'. ஒரு தாய் மற்றும் மகனின் வாழ்க்கை பயணமே கதை.
வருண் தவான், பூஜா ஹெக்டே, ம்ருணாள் தாக்கூர் நடித்த படம் `Hai Jawani Toh Ishq Hona Hai'. முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ளது.
Zendaya, Robert Pattinson நடித்த படம் `The Drama'. திருமணத்தை நோக்கி நகரும் காதலர்களுக்கு இடையே நடக்கும் சிக்கல்களே கதை.
அஜய் பூபதி இயக்கியுள்ள படம் `Srinivasa Mangapuram'. வாசு - மங்கா காதலில் வரும் சிக்கல்களே படம்.
ஆதித்யன் இயக்கியுள்ள படம் `Pluto'. விக்கி வாழ்க்கையில் நடக்கும் ஒரு சந்திப்பு அவரது வாழ்க்கையையே மாற்றுகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
விவேக் இயக்கியுள்ள படம் `Bhai Tera Star Hai'. கிரிக்கெட் சூதாட்டம் மூலம் ஏற்படும் சிக்கல்களே கதை.
Tom Holland, Zendaya, Sadie Sink நடித்துள்ள படம் `Spider-Man: Brand New Day'. உலகமே பீட்டர் பார்க்கரை மறந்த பின் ஸ்பைடர்மேன் வாழ்க்கையின் நிகழ்வுகளே கதை.
குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள படம் `Unmadham'. மறக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்கும் ஒரு காவலரின் கதை.