Jana Nayagan, Con City This Week's Release
கோலிவுட் செய்திகள்

முதல்வர் விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்' to ஓடிடியில் `Con City' இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் பல தடைகளை கடந்து `ஜனநாயகன்', ஓடிடியில் அர்ஜூன் தாஸின் `Con City' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: Ransom Canyon S2 (English) Netflix - July 23

Ransom Canyon S2

Josh Duhamel நடித்துள்ள `Ransom Canyon' சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகிறது. டெக்சாஸ் நகரில் ரான்ச் வைத்துள்ள மூன்று குடும்பங்களுக்கு இடையேயான தொழில் போட்டியே கதை.

Adarsh Bal Vidyalaya (Hindi) Prime - July 24

Adarsh Bal Vidyalaya

கே கே மேனன் நடித்துள்ள சீரிஸ் `Adarsh Baal Vidyalaya'. மோசமான நிலையில் இருக்கும் ஒரு பள்ளியை சீர் திருத்த எடுக்கும் முயற்சிகளே கதை.

Musafir Cafe (Hindi)  Netflix - July 24

Musafir Cafe

விக்ராந்த் மாஸே நடித்துள்ள சீரிஸ் `Musafir Cafe'. சந்தர், சுதா, ப்ரீத்தி என்ற மூன்று பயணிகளின் கதை எப்படி ஒன்றாகிறது என்பதே சீரிஸ்.

OTT: 72 Hours (English) Netflix - July 24

72 Hours

Tim Story இயக்கியுள்ள படம் `72 hours'. 40+ மனிதர் 20+ இளைஞர்களுடன் ஒரு வெகேஷனில் சிக்கிக் கொள்ள அங்கு நடக்கும் காமெடி கலாட்டாக்களே கதை.

Post Theatrical Digital Streaming: Con City (Tamil) Netflix - July 24

Con City

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகிபாபு, வடிவுக்கரசி நடித்த படம் `கான் சிட்டி'. தங்களை காப்பாற்ற கொள்ளையடிக்க முயலும் ஒரு குடும்பத்தின் கதை.

Pallichattambi (Malayalam) SonyLIV - July 24

Pallichattambi

டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடித்துள்ள படம் `Pallichattambi'. சட்டம்பி என்ற நபரால் உருவாகும் சிக்கல்களே படத்தின் கதை.

Secret of Kalinga (Malayalam) SunNXT - July 24

Secret of Kalinga

தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள படம் `Secret of Kalinga'. அமானுஷ்ய பிரச்னை ஒன்றில் சிக்கிக் கொள்ளும் மாணவர்களின் கதை.

Theatre: Jana Nayagan (Tamil) - July 23

Jana Nayagan

விஜய், மமிதா பைஜூ, பாபி தியோல் நடித்துள்ள படம் `ஜனநாயகன்'. மகளுக்காக போராடும் ஒருவர், மக்களுக்காகவும் போராடும் கதையே படம்.

Chennai Love Story (Telugu) - July 24

Chennai Love Story

கிரண் அப்பாவரம், கௌரி ப்ரியா நடித்துள்ள படம் `Chennai Love Story'. இளம் ஜோடியின் காதல் பயணமே கதை.

The India Story (Hindi) - July 24

The India Story

காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள படம் `The India Story'. விவசாயத்தில் பூச்சி கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பேசும் படம்.