Jason Sanjay Sigma
கோலிவுட் செய்திகள்

ஜேசன் சஞ்சய் இயக்கும் பட தலைப்பு அறிவிப்பு! | Jason Sanjay | Sundeep Kishan

2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

Johnson

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் 'சிக்மா' என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன் நடிக்கும் இப்படத்தை லைகா தயாரிக்க, ஜேசன் சஞ்சயும் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். தமன் இசையமைக்கும் இப்படம் 2026ல் வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் நடிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. மேலும் படப்பிடிப்புகளும் துவங்கியது.

இன்று இப்படத்தின் பெயர் `சிக்மா' என அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இப்படத்தை லைகா தயாரிக்கிறது என்றாலும், இயக்குநர் ஜேசன் சஞ்சயும் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார் என சொல்லப்பட்டு வந்தது. தயாரிப்பு நிறுவனத்தையும் பதிவு செய்திருந்தார் ஜேசன் சஞ்சய். 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற அந்த நிறுவனத்தின் பெயர் தற்போது போஸ்டரில் இணைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், 2026ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

’சிக்மா’ பட இயக்குநர் ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டதாவது, “’சிக்மா’ என்ற டைட்டில் பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ள படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி விடும்" என்றார்.