ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் படம் `ஜெயிலர் 2'. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்த `ஜெயிலர்' படம் மிகப்பெரிய ஹிட்டானதால், இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றங்களில் சிவராஜ்குமார், மோகன்லால் உடன் ஷாருக்கான், நந்தமுரி பாலகிருஷ்ணா, வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, அன்னா ராஜன் எனப் பலரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு வந்தது போல, இந்த பாகத்தில் நோரா ஃபதேஹி நடனம் ஆடியுள்ளாராம்.
இப்படத்தின் தற்போதைய அப்டேட் என்னவென்றால், இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்க ரஜினிகாந்த், கேரளாவின் கொச்சிக்கு வந்துள்ளார். இந்த ஷெட்யூலுடன் படப்பிடிப்பு நிறைவடையும் எனச் சொல்லப்படுகிறது. படம் ஜூன் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.