மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து ' பைசன் காலமாடன்' படம் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார் நடிகர் துருவ். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசனை அடிப்படையாகக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. இப்படத்திற்குப் பிறகு துருவ் எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என பல யூகங்கள் நிலவி வருகின்றன.
முன்பு மணிரத்னம் இயக்கத்தில் துருவ் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உதவியது. ஆனால் மணி அடுத்ததாக விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. இப்போது துருவ் அடுத்தாக தெலுங்கு-தமிழ் என இரு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த படத்திற்காக அவர் தயாராகி வரும் வீடியோவையும் இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது எனவும் கரண் அரவிந்த் குமார் இயக்கவுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் கரண் அரவிந்த் குமார் ' ஆதித்ய வர்மா' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் எனவும் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ' கருப்பு' படத்தின் எழுத்தாளர்களில் ஒருவர் எனவும் சொல்லப்படுகிறது.