Inban Udhayanithi எக்ஸ் தளம்
கோலிவுட் செய்திகள்

நடிகராக அறிமுகமாகும் இன்பன் உதயநிதி? | Inban Udhayanidhi

`இட்லி கடை' படத்தை ரெட் ஜெயண்ட் மூலம் வெளியிட்டு, சினிமா உலகில் கால் பதித்திருக்கும் இன்பன், சீக்கிரமே திரையுலகில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

Johnson

தமிழ் சினிமா உலகில் அதிகம் பேசப்படும் பெயராக மாறியிருக்கிறது நடிகரும், துணை முதல்வருமான உதயநிதியின் மகன் இன்பன் உதயநிதி. தனுஷ் இயக்கி நடித்து வெளியான `இட்லி கடை' படத்தை ரெட் ஜெயண்ட் மூலம் வெளியிட்டு, சினிமா உலகில் கால் பதித்திருக்கும் இன்பன் சீக்கிரமே திரையுலகில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது.

Inban Udhayanithi

இன்பன் தனது சினிமா அறிமுகத்துக்காக நடிப்புப் பயிற்சி பெற்றுவரும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் உலா வரும். எனவே அவர் தீவிரமாக நடிப்புக்குப் பயிற்சி எடுத்து வருகிறார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. இவரை அறிமுகப்படுத்த பல முன்னணி இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும், அதில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்பன் உதயநிதி நடிக்க இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே உதயநிதி நடிப்பில் `மாமன்னன்' படத்தை இயக்கியதன் மூலம் அவரின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார் என்பதும், அழுத்தமான கதைக்களங்களை எடுக்கிறார் என்பதும் இந்த தேர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள `பைசன்' படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்து தனுஷ் நடிப்பில் வேல்ஸ் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மாரி செல்வராஜ்

இது போக கார்த்தி நடிப்பில் ஒரு படம் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது தனுஷ், கார்த்தி படங்களுக்கு முன்பு இன்பன் உதயநிதியின் அறிமுகப்படுத்தை இயக்குவார் எனவும், மாரியின் உடனடி அடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.