A R Rahman Peddi
கோலிவுட் செய்திகள்

"தெலுங்கிலிருந்து ஒரு நல்ல படத்துக்காக காத்திருந்தேன்" - ஏ.ஆர்.ரஹ்மான் | A R Rahman | Peddi

நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆழமாகப் போகும்போது எல்லாக் கலைஞர்களிடம் இருந்தும் அது சிறந்தவைகளை எடுத்துக் கொள்ளும். அதுதான் சிறந்த படம். வெற்றி, தோல்வியைக் கடந்த விஷயம் அது.

Johnson

ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், திவ்யந்து, ஜெகபதிபாபு, பொம்மன் இராணி எனப் பலரும் நடித்துள்ள படம் `பெத்தி'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏ ஆர் ரஹ்மான், "நான் தமிழ் சினிமாவில் என்னுடைய பயணத்தைத் துவங்கினேன். பின்னர் தெலுங்கு, இந்தியில் படங்கள் டப்பிங் ஆனது. தெலுங்கு சினிமாவுக்கு மீண்டும் வர ஒரு நல்ல படத்துக்காகக் காத்திருந்தேன். அது, இந்தப் படமாக அமைந்துவிட்டது. நிறைய பேர் தெலுங்கு சினிமாவுக்கு அழைத்தார்கள். ஆனால், இவர் சொன்ன கதையைக் கேட்டதும், இதுதான் என்னுடைய முதல் தெலுங்குப் படம் என்பதைப்போல உணர்ந்தேன். 

இப்போதுதான் எல்லாம் துவங்குகிறது. புச்சி மற்றும் ராம் சரணுக்கு நன்றி. நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆழமாகப் போகும்போது எல்லாக் கலைஞர்களிடம் இருந்தும் அது சிறந்தவைகளை எடுத்துக் கொள்ளும். அதுதான் சிறந்த படம். வெற்றி, தோல்வியைக் கடந்த விஷயம் அது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் இந்த மனிதர் ஜொலிக்கிறார். இப்படத்தில் கடினமான உழைப்பை நான் பார்க்கிறேன். கோவிட் சமயத்தில் புச்சி துபாய் வந்தார். `சிக்கிரி' பாடலுக்கான ட்யூன்தான் முதல் ட்யூன். ’அது நன்றாக இருக்கிறது’ எனச் சொன்னார். பின்னர் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் வேலை தொடர்ந்தது. இவர் பார்க்கத்தான் அமைதியாக தெரிகிறார். ஆனால், ரொம்பவும் டெரர் அவர். ’வேறு ட்யூன் கொடுங்கள், வேறு பாடகரை மாற்றுங்கள்’ என கேட்டுக் கொண்டே இருப்பார்" என்றார்.