Vijay Sethupathi Mask
கோலிவுட் செய்திகள்

"வெற்றிமாறன் கிட்ட இந்த புள்ளப்பூச்சி மாட்டிக்கிச்சுனு..." - விஜய் சேதுபதி கலகல | Vijay Sethupathi

கவினை திரையில் பார்க்க மிகவும் பிடித்திருக்கிறது. ரொம்ப வசீகரமாக இருக்கிறீர்கள்.

Johnson

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் இயக்கியுள்ள படம் `மாஸ்க்'. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "விகர்ணன் மிக அழகாக பேசினார். இந்தப் படத்திற்குதான் வெற்றிமாறன் மெண்ட்டார் என நினைத்தேன். மேடை பேச்சுக்கு கூட அவர் தான் மெண்ட்டார் போல. நாளைக்கு நான் படம் செய்தாலும் எனக்கும் மெண்ட்டார் ஆகிவிடுங்கள் சார். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்தேன், மிகவும் பிடித்தது. விடுதலை படம் நடித்துக் கொண்டிருந்த போது `மாஸ்க்' படம் பற்றி வெற்றிமாறன் கூறினார். இந்த டைட்டில் கேட்டதும் படம் என்ன சொல்லும் என ஆர்வம் வந்தது, எம் ஆர் ராதா சாருடைய முகமூடி பயன்படுத்தியது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது. விஷுவல், வசனம் எல்லாவற்றையும் ரசித்தேன். இதெல்லாம் இந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.

ஆனால் இந்த ஆடியோ லான்சே ஒரு தனி டிரெய்லராகவும் படமாகவும் இருக்கிறது. வந்த எல்லோருமே அருமையாக பேசினார்கள். அதிலும் ராமர் பேச்சை என்னவென்று சொல்வது.  ஷுட் நடக்கும் போதே படத்தை காட்டுவது வெற்றி சாரின் வழக்கம். படத்தை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார். அப்படி விடுதலை படத்தை என்னை பார்க்க சொன்னார். அப்போது ராமரை பார்த்து, இந்த புள்ளப்பூச்சி இவரிடம் மாட்டிக் கொண்டு அல்லாடுகிறதே என நினைத்தேன். எனக்கு இப்போதுதான் தெரிந்தது, அந்த ஆளிடம் தான் இந்தக் கூட்டமே மாட்டி இருக்கிறது.

கவினை திரையில் பார்க்க மிகவும் பிடித்திருக்கிறது. ரொம்ப வசீகரமாக இருக்கிறீர்கள். இன்று நீங்கள் தேர்வு செய்யும் சில படங்கள் தோற்கலாம். ஆனால் இதுதான் பயிற்சி. எப்போதும் வண்டி மேலேயே செல்லாது, கீழே இறங்கவும் செய்யும். அப்போது விழும் அடியை தாங்கும் பலம் இருக்குமா என தெரியாது. ஆனால் இன்று விழுந்து வாங்கும் அடி, நம்மை மனரீதியாக தயார் செய்யும். இப்படி இருந்தால்தான் நம்முடைய சொந்த அறிவை வைத்து முன்னேற முடியும். இந்தப் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதில் இருப்பது போல பணம் சொக்கு சாருக்கும், ஆண்ட்ரியாவுக்கு கொட்டட்டும்.

Vijay Sethupathi

ஆண்ட்ரியா பல வருடமாக அப்படியே இருக்கிறீர்கள், அது எப்படி என தெரியவில்லை. நரசூஸ் காபி விளம்பரத்தில் பார்த்த போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்கிறீர்கள். அப்போதும் யார்ரா இந்த பொண்ணு எனப் பார்த்தேன். இப்போதும் யார்ரா இந்த பொண்ணு எனப் பார்க்கிறேன். நாளை என் பையனும் யார்ரா இந்த பொண்ணு என பார்ப்பான் போல. வீட்டு போனதும் ஃபிரிட்ஜ்ஜில் உட்கார்ந்து கொள்வீர்களா எனத் தெரியவில்லை" என்றார்.