மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் `ட்ரெய்ன்'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி "நான் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் போது இவரின் ஆடிஷன்களுக்கு சென்று இருக்கிறேன். நான் ஹீரோ ஆன பின்பு அழைத்தார், இவரை பார்க்க சைக்கோ போல இருந்ததால் டேட் இல்லை என்று சொல்லிவிட்டேன், சைக்கோ படம் பார்த்த பிறகு இவரை மிகவும் பிடித்துவிட்டது. ஒரு படம் பார்த்து பிடித்துவிட்டால், அந்த இயக்குநருக்கு போன் செய்து நான் புரிந்து கொண்டது சரிதானா என பேசுவது வழக்கம்.
அப்படி இவருக்கு போன் செய்து பேசினேன். 8 மணிநேரம் பேசினேன். பிறகு வாட்ச் ஒன்று பரிசளித்தார். அப்படி துவங்கிய நட்பினால் பிசாசு 2 படத்தில் நடித்தேன். ட்ரெய்ன் ஆரம்பித்தது. இந்தப் படம் கலர்ஃபுல் கல்யாணம் போல, பல விதமான நபர்கள் இருப்பார்கள். செட்டுக்குள் எப்போதும் ஒரு எனர்ஜி இருக்கும்.
நன்றாக நடிக்கும் நடிகர், நன்றாக வேலை செய்யும் நபர் இருவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்ற ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் செய்தார் மிஷ்கின். அது பணம் என்பதை தாண்டி உற்சாகத்தை அது கொடுத்தது. இந்தப் படம் வேண்டுமானால் த்ரில்லர் படமாக இருக்கலாம், ஆனால் எடுக்கும் போது ரொமான்டிக் ஆக தான் எங்களுக்கு இருந்தது" என்றார்.