Kayadu Lohar Idhayam Murali
கோலிவுட் செய்திகள்

"என்னை ஈவ்டீசிங் செய்த பையனை..." - கயாடு சொன்ன சம்பவம்! | Kayadu Lohar

நான் பார்க்கத்தான் அப்பாவிபோல, அதிகம் பேசாத ஒரு பெண்போல இருப்பேன். ஆனால், தவறான செயல்களைப் பார்த்தும் அமைதியாகக் கடக்கக்கூடாது.

Johnson

கன்னடத்தில் `Mugilpete' படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். பின்னர் மலையாளத்தில் Pathonpatham Noottandu, Oru Jaathi Jaathakam, தெலுங்கில் Alluri, Funky போன்ற படங்களில் நடித்தார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய `டிராகன்' படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பைப் பெற்றார். இவர் இப்போது அதர்வா நடித்துள்ள `இதயம் முரளி' படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இந்தப் படம் ஜூலை 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Kayadu Lohar

இப்படம் தொடர்பான பேட்டி ஒன்றில், ஒரு பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எப்படி கையாளுவீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கயாடு, "நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் நடந்த விஷயம் இது. ஒரு பையன் ஈவ்டீசிங் செய்தான், முதல் நாள் சகித்துக் கொண்டேன். இரண்டாம் நாளும் சகித்துக் கொண்டேன். ஆனால், மூன்றாவது நாள் என்னால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஒரு கல்லை எடுத்து அவன் தலையைப் பார்த்து எறிந்தேன். அவனுக்கு ரத்தம் வரத் தொடங்கியது. பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டேன். அங்கு பின்பு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. எல்லோரையும் கல்லை எடுத்து எரிய வேண்டும் என நான் சொல்லவில்லை.

Kayadu Lohar

அந்தச் சூழலில் அப்படி தோன்றியது. அப்போது நான் அதைச் செய்தாலும் கல் எடுத்து எறிவது வன்முறையான விஷயம்தான். அதேநேரம், நான் பார்க்கத்தான் அப்பாவிபோல, அதிகம் பேசாத ஒரு பெண்போல இருப்பேன். ஆனால் தவறான செயல்களைப் பார்த்தும் அமைதியாக கடக்கக்கூடாது. அதனை எதிர்த்து நம்மால் முடிந்த விஷயத்தைச் செய்ய வேண்டும்" என்றார்.