சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வெளியான படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமான இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறது படக்குழு.
அந்தப் பேட்டியில் தன்னுடைய அடுத்த படம் எப்படி இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார். அதில்எனக்கு காமெடி படங்கள் தான் மிகவும் பிடிக்கும். எல்லோரையும் சந்தோஷப்படுத்துவதை விட வேறு என்ன திருப்தி இருக்க முடியும். எனக்கு இப்போதெல்லாம் காமெடி படங்கள் வருவதில்லை. நிறைய பேர் ஏன் நீங்கள் காமெடி என்டர்டெய்னர் படங்கள் செய்வதில்லை எனக் கேட்கிறார்கள். உண்மை என்ன என்றால் எனக்கு அப்படியான கதைகள் வருவதில்லை. அதற்கு பட்ஜெட் உட்பட பல காரணங்கள் உள்ளது. ஆனால் நான் அடுத்து செய்யக்கூடிய படம் எதுவாக இருந்தாலும், முழு எண்டர்டெய்னராக தான் இருக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன். ஏனென்றால், இதுவரை செய்திருப்பது எல்லாம் ஹெவியான பாத்திரங்கள். அது மிக பாரமாக இருக்கிறது.
பராசக்தி, அமரன் போன்ற படங்கள் நடிக்கையில் என்னிடம் உள்ள வேறு பரிமாணத்தை காட்ட முடிகிறது. ஆனால் இன்னொரு பக்கம் காமெடி, என்டர்டெய்னிங் படங்களை மிஸ் செய்கிறேன். இரண்டையும் செய்ய ஆசையாக இருக்கிறது. அந்த மாதிரி அடுத்து செய்வேன். ஆனால் முழு காமெடி கதைகள் எனக்கு வருவதே இல்லை" என்றார். சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்காக அமெரிக்கா சென்று பாடி ஸ்கேன் எல்லாம் செய்து வந்தார் சிவா. ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் படமாக இப்படம் உருவாகும் என சொல்லப்படுகிறது. `அமரன்', `மதராஸி', `பராசக்தி' என தொடர்ச்சியாக சீரியஸ் படங்களாக நடித்து வந்த சிவா அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் படம் பொழுதுபோக்காக படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.