H Vinoth Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

"உண்மை என்னனு சொன்னா... " ஜனநாயகன் பற்றி பேசிய ஹெச் வினோத் | H Vinoth | Jana Nayagan

நடிகர் விஜய் இப்போது முதலமைச்சர் விஜய் ஆகிவிட்டார். எனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வர இருந்து சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இல்லாமல் முடங்கி இருக்கிறது. நடிகர் விஜய் இப்போது முதலமைச்சர் விஜய் ஆகிவிட்டார். எனவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சமீபத்திய யூட்யூப் சேனலில் நடந்த உரையாடல் ஒன்றில் இயக்குநர் ஹெச் வினோத்திடம் ஜனநாயகன் வெளியீடு எப்போது எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹெச் வினோத் "அது நம் கையில் இல்லை. அதில் இருக்கும் உண்மையை எல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு இல்லை. அதனால் வரும் போது பார்ப்போம்" என்றார்.

Jana Nayagan

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சாமி தரிசனத்துக்கு வந்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவிடம் ஜனநாயகன் வெளியீடு பற்றி கேட்கப்பட்ட போது "நாங்கள் சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறோம். சீக்கிரமே அது வந்துவிடும் என நம்புகிறோம். கிடைத்த உடன் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவோம்" என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.