ஹெச் வினோத் - தனுஷ் web
கோலிவுட் செய்திகள்

’விஜய் படத்திற்கு பிறகு தனுஷ் உடன் இணையும் ஹெச் வினோத்..’ உறுதிசெய்த முக்கிய நபர்?

நடிகர் விஜய் உடனான ஜன நாயகன் படத்திற்கு பிறகு இயக்குநர் ஹெச் வினோத் தனுஷ் உடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

’சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ முதலிய திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஹெச் வினோத், தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டஇயக்குநராக வலம்வருகிறார்.

தற்போது நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என கூறப்படும் ’ஜன நாயகன்’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கும் ஹெச் வினோத், அடுத்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

h vinoth

ஜன நாயகன் படத்திற்கு முன்பே தனுஷ் உடன் படம் இயக்கும் எண்ணத்தில் இருந்த ஹெச் வினோத்திற்கு, நடிகர் விஜயிடம் சொன்ன கதை கிளிக் ஆகிவிடவே முதலில் ஜன நாயகன் படத்தை முடிக்க சென்றுவிட்டதாகவும், அதற்கு தனுஷும் அனுமதி வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜன நாயகன் ரிலீஸை தொடர்ந்து உடனடியாக தனுஷை வைத்து ஹெச் வினோத் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் உடன் இணையும் ஹெச் வினோத்..

நடிகர் விஜய் உடனான படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து ஹெச் வினோத் இயக்கப்போவதாக ஒரு தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்றும் அடுத்த படத்தை தனுஷ் உடன் தான் வினோத் இயக்கவிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தனுஷ்-ஹெச் வினோத் உடனான புதிய படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் குமார் தயாரிக்கவிருப்பதாகவும், அப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவிருப்பதாகவும், மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்டை விரைவில் படக்குழு வெளியிடும் எனவும் எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், அதை உறுதிப்படுத்தும் வகையில் ரியாக்ட் செய்துள்ளார். இந்த சூழலில் தனுஷ் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் இருவரும் விரைவில் இணைவார்கள் என்பதால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.