தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். சமீபத்தில் ஒரு பேட்டியினபோது பல விஷயங்களைப் பகிர்ந்தகொண்டார். அதில் அடுத்து இயக்கும் படம் பற்றியும், `துருவ நட்சத்திரம்' ரிலீஸ் பற்றியும் கூறியுள்ளார்.
விதவிதமான படங்கள் பார்ப்பது பற்றி பேசும்போது " ‘காந்தாரா’ போன்ற படமோ, வெற்றி, இரஞ்சித் செய்யும் படங்களை எல்லாம் பார்க்கும்போதோ எனக்கும் அப்படியான படங்கள் செய்ய வேண்டும் எனத் தோன்றும். அந்தப் பாதியில் சென்றால் பேன் இண்டியன் கவனம் கிடைக்கும் என நினைப்பதுண்டு. ஆனால் அது அந்த தருணத்தில் வருவதுதானே தவிர, எழுத ஆரம்பித்துவிட்டால், வேறு ஒன்றைத்தான் எழுதுவேன். எனக்கு அதனுடனட்தான் பிணைப்பு இருக்கிறது. எனக்கு எது வேலைக்கு ஆகிறது என தோன்றுகிறதோ, அதுதான் பிறருக்கும் பிடிக்கும் என நினைப்பேன். இதன் வீச்சு எந்த அளவுக்கு இருக்கும் என கணிக்க முடியாது" என்றார்.
அடுத்த படம் பற்றி கேட்கப்பட, "இப்போது ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன், அது முடிவடையும் தருவாயில் இருக்கிறது. சீக்கிரமே அந்தப் படத்தை துவங்குவேன். `துருவ நட்சத்திரம்' பட பிரச்னைகளை பெரும்பாலும் தீர்த்துவிட்டேன். சீக்கிரமே அதற்கான அறிவிப்பு வரும்" எனக் கூறியுள்ளார் GVM.