சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கிவரும் படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இதில் ஆர் ஜே பாலாஜியும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சூர்யா பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளியானது. இப்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இதுபற்றி சமீபத்தில் பேசிய ஆர் ஜே பாலாஜி "படம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. முதலில் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என நினைத்தோம். ஆனால் படத்தில் நிறைய சி ஜி காட்சிகள் செய்ய நேரம் தேவைப்படுவதால் முடியாமல் போனது.
படத்தின் முதல் சிங்கிள், தீபாவளிக்கு வெளியாகும்" எனக் கூறி இருந்தார். அதன்படி இன்று படத்தின் முதல் சிங்கிளாக God Mode பாடல் வெளியாகி இருக்கிறது. விஷ்ணு எடவன் எழுதி இருக்கும் இப்பாடலை இசையமைத்து பாடி இருக்கிறார் சாய் அபயங்கர்.