G V Prakash Ken Karunas
கோலிவுட் செய்திகள்

"இந்தப் படத்துக்கு நான்தான் மியூசிக்" சபதம் செய்த ஜி வி பிரகாஷ் | G V Prakash | Ken Karunas

இது ஒரு ஜாலியான பள்ளிக்கூட பின்னணியில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு.

Johnson

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். `அழகுக்குட்டிச் செல்லம்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான கென், `அசுரன்', `வாத்தி', `விடுதலை: பாகம் 2' போன்ற படங்களில் நடித்தார். இந்த நிலையில், தற்போது கென் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாக உள்ளார், இப்படத்தின் நாயகனாகவும் அவரே நடிக்கிறார்.

இது ஒரு ஜாலியான பள்ளிக்கூட பின்னணியில் உருவான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என அறிவித்துள்ளது படக்குழு. அதற்கான ஒரு ஜாலியான வீடியோ புரமோவையும் வெளியிட்டுள்ளனர். அந்த புரமோ "உங்களுக்கே ஸ்கூல் போற வயசுல பொண்ணு இருக்கு, நீங்க எப்படி ஸ்கூல் படத்துக்கு மியூசிக் பண்ணுவீங்க" என, ஜி வியை கலாய்ப்பது போலவும், "இந்தப் படத்துக்கு நான் தான் மியூசிக் பண்ணுவேன்" என சபதம் செய்வது போலவும் காலாட்டாவாக அமைந்திருக்கிறது.

இப்படத்திற்கு `காதலன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், தெலுங்கில் வெளியான ’கோர்ட்’ பட நாயகி ஸ்ரீதேவி, இதில் நாயகியாக நடிக்க உள்ளார் எனவும் தகவல். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது.