G V Prakash Vekkai
கோலிவுட் செய்திகள்

ஜிவி பிரகாஷ் - ஸ்ரீநாத் பாஸி இணைந்து நடித்துள்ள `வெக்கை' | G V Prakash | Sreenath Bhasi

அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது இந்தப் படம்.

Johnson

ஜிவி பிரகாஷ் மற்றும் ஸ்ரீநாத் பாஸி இணைந்து நடித்துள்ள படம் `வெக்கை'. பா.இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது இந்தப் படம். ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது என்பதையும் அன்றாட வாழ்வில் சாதாரணமாக தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னால் மறைந்திருக்கும் அகங்காரம், ஆத்திரம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளையும் மையப்படுத்திய ஆக்ஷன் த்ரில்லர்தான் 'வெக்கை'.

சென்னை நகரின் பின்னணியில் நடைபெறும் இந்தக் கதையில் ஜிவி பிரகாஷ் மற்றும் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.