விஷ்ணு எடவன் இயக்கியுள்ள படம் `ஹாய்'. முதன்முறையாக நயன்தாரா – கவின் ஜோடி இணைந்து நடிக்கும் இப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் தமிழில் `டெஸ்ட்' படமும், கவினுக்கு `மாஸ்க்' படமும் வெளியானது. இந்தாண்டு இருவருக்கும் முதல் தமிழ் ரிலீஸ் `ஹாய்'தான்.
இந்தப் படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலைச் சொல்லும் வகையில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்திலிருந்து `கன்னக்குழியா புதைகுழியா' எனத் தொடங்கும் காதல் மெலடி வெளியாகியுள்ளது. ஜென் மார்டின் இசையில் இப்பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ’கைதி’, ’மாஸ்டர்’, ’விக்ரம்’ போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன், இந்தப் படத்தின் மூலம் தனித்துவமான காதல் மற்றும் குடும்பக் கதையைக் கொண்டு வருகிறார்.
நயன்தாரா – கவின் காம்பொ ஜென் மார்டின் இசை, மற்றும் விஷ்ணு எடவனின் புதிய கதை சொல்லும் முறையுடன், இந்த படம் ஓர் உணர்ச்சி மிக்க காதல் அனுபவமாக மாறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.