My Lord, Pookie, TTT Pt web
கோலிவுட் செய்திகள்

My Lord, Pookie, Funky | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்! | Sasikumar | Vijay Antony

இந்த வாரம் தியேட்டரில் சசிகுமாரின் `My Lord', விஜய் ஆண்டனியின் `Pookie', ஓடிடியில் `Bandwaale' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: The 'Burbs (English) Jio Hotstar - Feb 9

The 'Burbs

Celeste Hughey உருவாக்கியுள்ள சீரிஸ் `The 'Burbs'. புதுமண தம்பதி கணவனின் சொந்த ஊருக்கு சென்ற பின் தெரிய வரும் மர்மங்களின் கதை.

Kohrra S2 (Punjabi)  Netflix - Feb 11

Kohrra S2

சுதீப் ஷர்மா, ஃபைசல் ரஹ்மான் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Kohrra S2'. சென்ற பாகத்தில் ஒரு கொலை வலக்கை விசாரித்தது போல, இந்த பாகத்திலும் ஒரு வழக்கு அதன் முடிவு என்ன என்பதே கதை.

Bandwaale (Hindi) Prime - Feb 13

Bandwaale

அக்ஷத் - அங்கூர் இயக்கியுள்ள சீரிஸ் `Bandwaale'. மரியம் என்ற இளம் பெண்ணை சுற்றிய கதை.

OTT: Sampradayini Suppini Suddapoosani (Telugu) - ETv Win - Feb 12

Sampradayini Suppini Suddapoosani

சுதீர் ஸ்ரீராம் இயக்கியுள்ள படம் `Sampradayini Suppini Suddapoosani'. கிராம தலைவரின் குடும்பத்துக்கு வரும் ஒரு சிக்கலும் அதற்கான தீர்வுமே கதை.

Post Theatrical Digital Streaming: Mana Shankara Vara Prasad Garu (Telugu) Zee5 - Feb 11

Mana Shankara Vara Prasad Garu

சிரஞ்சீவி நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கிய படம் `Mana Shankara Vara Prasad Garu'. மனைவி குழந்தைகளுடன் மீண்டும் இணைய கணவர் எடுக்கும் முயற்சிகளே கதை.  

Anaganaga Oka Raju (Telugu) Netflix - Feb 11

Anaganaga Oka Raju

நவீன் போலிஷெட்டி நடித்த படம் `Anaganaga Oka Raju'. ராஜூ - சாருலதாவின் திருமணத்துக்கு பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.

Thalaivar Thambi Thalaimaiyil (Tamil) Netflix - Feb 12

Thalaivar Thambi Thalaimaiyil

ஜீவா நடித்த படம் `தலைவர் தம்பி தலைமையில்'. ஒரு திருமணத்தை நடத்த போராடும், உள்ளூர் அரசியல்வாதியின் கதை.

Baby Girl (Malayalam) Sony LIV - Feb 12

Baby Girl

நிவின் பாலி நடிப்பில் அருண் வர்மா இயக்கிய படம் `Baby Girl'. குழந்தை கடத்தலை மையமாக வைத்த ஒரு த்ரில்லர் படம் 

Eternity (English) AppleTV+ - Feb 13

Eternity

David Freyne இயக்கத்தில் Miles Teller, Elizabeth Olsen நடித்த படம் `Eternity'. மரணத்திற்கு பிறகான அமரத்துவ வாழ்வை யாருடன் கழிப்பது என்ற தேர்வை ஒரு பெண் செய்வதில் வரும் சிக்கல்களே படம்.

Theatre: My Lord (Tamil) - Feb 13

My Lord

சசிக்குமார், சைத்ரா நடித்துள்ள படம் `மை லார்ட்'. எளிய மனிதனுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்குமான மோதலே கதை.

Kaa (Tamil) - Feb 13

Kaa

ஆண்ட்ரியா நடித்துள்ள படம் `கா'. காட்டுக்குள் அட்வென்சர் செய்ய போகும் பெண்ணுக்கு வரும் ஆபத்தும், அதிலிருந்து மீள்வதுமே கதை.

Pookie (Tamil) - Feb 13

Pookie

கணேஷ் சந்திரா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் திஷன், தனுஷா நடித்துள்ள படம் `பூக்கி'. ஒரு காதல் ஜோடிக்கு வரும் சிக்கல்களே கதை.

Funky (Telugu) - Feb 13

Funky

அனுதீப் இயக்கத்தில் விஷ்வக் சென், கயாடு லோஹர் நடித்துள்ள படம் `Funky'. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது.

Pennum Porattum (Malayalam) - Feb 13

Pennum Porattum

ராஜேஷ் மாதவன் இயக்கியுள்ள படம் `Pennum Porattum'. நாயுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே நடக்கும் மோதலே படம்.

O Romeo (Hindi) - Feb 13

O Romeo

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ள படம் `O Romeo'. மோசமான ஒருவனுக்கு காதல் வந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Tu Yaa Main (Hindi) - Feb 13

Tu Yaa Main

பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள படம் `Tu Yaa Main'. முதலை தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் ஜோடியின் கதை.

Wuthering Heights (English) - Feb 13

Wuthering Heights

Emerald Fennell இயக்கியுள்ள படம் `Wuthering Heights'. தீவிரமான காதல் கதையாக உருவாகியுள்ளது.

Crime 101 (English) - Feb 13

Crime 101

Chris Hemsworth நடித்துள்ள படம் `Crime 101'. ஒரு கொள்ளையனின் கதையை சொல்கிறது படம்.

Seetha Payanam (Tamil) - Feb 14

Seetha Payanam

அர்ஜூன் இயக்கியுள்ள படம் `சீதா பயணம்'. தன்னை விபத்திலிருந்து காப்பாற்றிய நபரை சந்திக்க செல்லும் ஒரு பெண்ணின் பயணம்.

Couple Friendly (Telugu) - Feb 14

Couple Friendly

அஷ்வின் சந்திரசேகர் இயக்கியுள்ள படம் `Couple Friendly'. புதிய நகரத்தில் அடையாளத்துக்காக போராடும் இருவரின் கதை.