Pradeep Ranganathan -LIK Movie web
கோலிவுட் செய்திகள்

`எனக்கென யாருமில்லையே'... LIK வீடியோ பாடல் வெளியீடு! | Pradeep Ranganathan | Anirudh

இப்பாடல் உருவாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்ட போதிலும், இன்றுவரை பலரது பிளே-லிஸ்டில்  இடம்பெற்றுள்ளது.

Johnson

அனிருத் இசையில் 2015 காதலர் தினத்தில் வெளியான 'எனக்கென யாருமில்லையே' பாடல், தற்போது LIK படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வீடியோ வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இந்த பாடல், பலரது பிளேலிஸ்டில் இடம்பிடித்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் அறிமுகமானவர் இன்று பல முன்னணி படங்களின் இசையமைப்பாளராக வலம் வருகிறார். ஆரம்ப காலத்தில் அவர் இசையில் உருவாவதாக இருந்த படம் `அக்கோ'. இப்படம் சில காரணங்களால் உருவாகவில்லை. ஆனால் இப்படத்திலிருந்து `எனக்கென யாருமில்லையே' பாடல் 2015ம் ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இப்பாடல் உருவாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்ட போதிலும், இன்றுவரை பலரது பிளேலிஸ்டில்  இடம்பெற்றுள்ளது. தற்போது இந்தப் பாடலை, பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள LIK படத்தில் பயன்படுத்தியுள்ளார் விக்னேஷ் சிவன். சில மாதங்களுக்கு முன்னால் வந்த LIK First Punch வீடிவோவில் இப்பாடல் இருந்தது.

ஒவ்வொரு காதலர் தினத்துக்கு அனிருத் ஏதாவது ஒரு காதல் பாடல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருட காதலர் தினமான இன்று, பதினோரு ஆண்டுகளுக்கு முந்தைய காதலர் தினத்துக்கு வெளியான `எனக்கென யாருமில்லையே' பாடலை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். ஆனால் இந்த முறை LIK படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வீடியோ வெர்ஷனாக வந்திருக்கிறது.