துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, ராணா, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள `காந்தா' படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கிய இப்படம் 1950களின் சென்னையில் சினிமா துறையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ராணாவின் Spirit Media மற்றும் துல்கரின் Wayfarer Films இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் பெரிய வரவேற்பு பெற்றது.
துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, ராணா, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் `காந்தா'. நெட்ஃபிளிக்ஸ்ல் வெளியான `நிலா' திரைப்படம், The Hunt for Veerappan என்ற ஆவணப்படத்தையும் இயக்கிய செல்வமணி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். செப்டம்பர் 12ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட இப்படம் தள்ளிப் போனது. இப்போது படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
1950களின் சென்னையில் இயங்கிய சினிமா துறையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது படம். அய்யா என்ற இயக்குநர், சந்திரன் என்ற நடிகர், குமாரி என்ற நடிகை இம்மூவருக்குள் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.
ஜூலை மாதம் வெளியான இப்படத்தின் டீசருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்படம் நடிகர் ராணாவின் Spirit Media மற்றும் துல்கரின் Wayfarer Films ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி துல்கர் தயாரித்திருந்த `லோகா' என்ற மலையாளப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
அப்படம் வெளியான இரண்டு வாரங்களில் துல்கர் தயாரித்த இன்னொரு படமும் வெளியானால், லோகாவின் வெற்றி பாதிக்கப்படும் எனக் கூறி `காந்தா' படம் தள்ளிப் போகிறது என அறிவித்தனர். இப்போது `காந்தா' நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.