Nelson Dilipkumar Mask
கோலிவுட் செய்திகள்

கவினை யாருக்குமே பிடிக்கக் கூடாது என எழுதி இருக்கிறார்! - நெல்சன் | Kavin | Nelson | MASK

வெற்றிமாறன் தயாரிப்பில் சமூகம் சார்ந்த படங்கள்தான் அதிகம் இருக்கும். இந்தப் படத்திலும் அது இருக்கும். ஆனால் பொழுதுபோக்கு அதிகமாக இருக்கும்.

Johnson

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் விகர்ணன் இயக்கியுள்ள படம் `மாஸ்க்'. இப்படம் நவம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் "ஆறு மாசத்துக்கு முன்னாலேயே வெற்றிமாறன் சார், இந்த ஆடியோ லான்ச்க்கு வரணும் என சொல்லிவிட்டார். இந்தப் படத்தின் கதையை, அதன் ஐடியாக்களை கேட்ட போது மிகவும் குதர்க்கமாக இருந்தது. இதை எப்படி நீங்கள் செய்கிறீர்கள் எனக் கேட்டேன். அதற்குத்தான் உங்களை கூப்பிட்டேன் எனக் கூறினார். இந்த மாதிரி ஒரு கதையை யோசித்தது யார் எனப் பார்க்க எனக்கு ஆர்வம் வந்தது. வெற்றி சாரின் அலுவலகத்தில் அவரை முதன் முறை பார்த்தேன். கதையில் இருந்த எல்லா க்ரைமுக்கும் ஏற்ற முகமாக இருந்தது. விகர்ணன் இந்த மாதிரி கதையை யோசித்தது பெரிய விஷயம், அதை சொல்லி வெற்றிமாறனை ஏமாற்றியது இன்னும் பெரிய விஷயம்.

இந்தப் படம் பற்றி நானும் கவினும் நிறைய உரையாடுவோம். அப்போதெல்லாம் நான் சொல்வது ஒன்றுதான். இந்தப் படம் மிக ஃப்ரெஷ் ஆக இருந்தது. டார்க் காமெடிக்கான இடம் உள்ளது, அதை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். வெற்றிமாறன் தயாரிப்பில் சமூகம் சார்ந்த படங்கள் தான் அதிகம் இருக்கும். இந்தப் படத்திலும் அது இருக்கும். ஆனால் பொழுதுபோக்கு அதிகமாக இருக்கும். படத்தில் கவினின் கதாபாத்திரம் மிக க்ரேவாக இருந்தது. கவினை யாருக்குமே பிடிக்கக் கூடாது என நினைத்து எழுதினால் எப்படி இருக்குமோ, அது போல எழுதி இருந்தார். அதை வெற்றிசார்தான் குறைத்து இருப்பார் என நினைக்கிறேன்.

ஒரு படம் ஓடுமா ஓடாதா என்பதை எல்லாம் தாண்டி, இதில் புதிதாக என்ன இருக்கிறது எனப் பார்க்க கூடியவர் கவின். இப்போது அவர் மேலே கீழே போய் வந்தாலும், இன்னும் சில காலம் கழித்து அவருக்கு நிலையான இடம் கிடைக்க இதெல்லாம் உதவும். படத்திற்கு படம், அவரது நடிப்பு மெருகேறுகிறது. ஆண்ட்ரியா மேம், சவாலான பாத்திரங்கில் நடிப்பார். இதிலும் நிறைய சவால் இருந்திருக்கும். உங்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி சாரிடம் பேசிக் கொண்டிருந்தால் அவர் ஏதோ ஜாலியாக பேசுவது போல இருக்கும். ஆனால் 5 நிமிடம் கழித்துதான், அவர் கஷ்டத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார் என தெரியும். அவர் வெளியே பார்க்க தான் சீரியஸாக இருப்பது போல் தெரியும். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் ரொம்ப சீரியஸ் பிரச்சனையையே ஜாலியாக தான் சொல்வார்" என்றார்.