Captain Miller Teaser
Captain Miller Teaser @Sathya Jyothi Films you tube
கோலிவுட் செய்திகள்

அசத்தல் லுக்கில் நடிகர் தனுஷ் - ரிலீஸ் தேதியுடன் வெளியான ‘கேப்டன் மில்லர்’ டீசர்!

சங்கீதா

‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ ஆகியப் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், சந்தீப் கிஷன், ப்ரியங்கா அருள்மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், மூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மூன்றுவிதமான தோற்றங்களில் தனுஷ் வரவுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் போர் காட்சிகள் இருக்கும் என்றும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட ‘கே.ஜி.எஃப்’ போன்று இருக்கும் என்றும் அவர் கூறியிருந்த நிலையில், தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள டீசரில், மிரட்டலான காட்சிகளுடன் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் உள்ளன.

வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார். நாகூரன் படத்தொகுப்பாளராகவும், கலை இயக்குநராக தா. ராமலிங்கமும் பணியாற்றியுள்ளனர். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை கவனித்துள்ளார்.