Yatra Dhanush
கோலிவுட் செய்திகள்

மகனை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறாரா தனுஷ்? | Dhanush | Yatra

ஏற்கெனவே தன் அக்காவின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் இயக்கினார் தனுஷ்.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். கடந்த ஆண்டு இவர் நடித்த `குபேரா', `தேரே இஷக் மே' படங்களும் இயக்கிய `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்', `இட்லிக்கடை' ஆகிய படங்கள் வெளியானது. இந்தாண்டு விக்னேஷ் ராஜா இயக்கத்தில் `கர' படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதில்லாமல் இன்னும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்போது புது அப்டேட் என்ன என்றால், மீண்டும் ஒரு படத்தை விரைவில் தனுஷ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் ஹீரோ வேறு யாருமில்லை தனுஷின் மூத்த மகன் யாத்ரா தான் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தன் அக்காவின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து `நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் இயக்கினார். இப்போது தன்னுடைய மகனையே விரைவில் ஹீரோவாக அறிமுகமாக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Yatra

இது பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என்றாலும், சினிமா வட்டாரத்தில் இந்த பேச்சு தீவிரமாக பரவி வருகிறது. மேலும், நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம் மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார்.