Dhanush Idly Kadai
கோலிவுட் செய்திகள்

"கோயம்புத்தூர் செஃப் கதையா? இட்லிக்கு காசில்லையா?" - தனுஷ் கொடுத்த விளக்கம் | Dhanush | Idly Kadai

பட்ஜெட் வைத்து குடும்பம் நடத்தும் வீட்டில் அதற்கு வாய்ப்பே இருக்காது. நாங்கள் நால்வரும் வீட்டின் சூழலை புரிந்து கொள்ளும் குழந்தைகள் என்பதால், காசு கேட்க மாட்டோம், கேட்டாலும் கிடைக்காது.

Johnson

தனுஷ் இயக்கி நடித்துள்ள `இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு சென்னையிலும், ட்ரெய்லர் வெளியீடு கோவையிலும், ப்ரீ ரிலீஸ் நிகழ்வை மதுரையிலும் நடத்திய படக்குழு, திருச்சியிலும் ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்வை நேற்று மாலை நடத்தினர். இந்நிகழ்வில் மேடை ஏறிய பரிதாபங்கள் கோபி-சுதாகர், டிராவிட் சில கேள்விகளை முன் வைக்க, அதற்கு பதிலளித்தார் தனுஷ். 

கோபி:"இட்லி கடை டிரெய்லர் பார்த்து சிலர், இது கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு செஃப் கதை என சொல்கிறார்களே, அது உண்மையா?"

தனுஷ்: "அந்த மாதிரி எதுவும் இல்லை, இது கற்பனைக் கதை. நான் என் கிராமத்தில் பார்த்து என் மனதை பாதித்த சில கதாபாத்திரங்களை மையமாக வைத்து எழுதிய கற்பனை கதை."

Idly Kadai

சுதாகர்: "நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வெள்ளை சட்டை, வேட்டி, ஒரு மாலை அணிந்து வருகிறீர்கள். உங்களுக்கு போட்டால் அது நன்றாக இருக்கிறது. நாங்கள் போட்டால் அவ்வளவு நன்றாக இல்லையே ஏன்?"

தனுஷ்: "வேட்டி சட்டை யார் அணிந்தாலும் நன்றாகவே இருக்கும். நம் ஊரின் உடையல்லவா."

டிராவிட்: "முன்பெல்லாம் ஒல்லியாக இருக்கும் பசங்களை பார்த்தால் உருவ கேலி செய்வார்கள். நீங்கள் வந்ததற்கு பிறகு அது ஒரு ஸ்டைலாக மாறியது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?"

தனுஷ்: "இங்கு இருக்கும் முக்கால்வாசி பேர் அப்படித்தான் இருப்பார்கள். சிறுவயதில் அப்படி யாராவது சொன்னால் வருத்தமாக இருக்கும். வளர வளர அந்த பக்குவம் வந்தது. ப்ரூஸ்லீ கூட ஒல்லியாக தான் இருப்பார்."

Idly Kadai

சுதாகர்: "இசை வெளியீட்டில் நீங்கள் இட்லி வாங்கவே காசில்லை என்று சொன்னீர்கள். அப்போது உங்கள் அப்பா தான் இயக்குநர் ஆகி விட்டாரே. பின்பும் எப்படி அது என..."

தனுஷ்: "1983-ல் நான் பிறந்தேன்; 1991-ல்தான் அப்பா இயக்குநரானார். எனவே அந்த எட்டு வருடம் வறுமை தான். அவர் இயக்குநரான பிறகும் கூட 94, 95 வரை கொஞ்சம் வறுமை தான். நாங்கள் 4 பிள்ளைகள் என்பதால், எங்களுக்கான செலவுகள், பள்ளிக்கட்டணம் என அப்பாவுக்கு சிரமம் இருந்தது. 95க்கு பின்னர்தான் வாழ்க்கை கொஞ்சம் மாறியது. சிறுவயதில் குடும்பத்தில் யாரிடமாவது சாப்பிடவோ, எங்காவது போகவோ காசு கேட்டால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள். பட்ஜெட் வைத்து குடும்பம் நடத்தும் வீட்டில் அதற்கு வாய்ப்பே இருக்காது. நாங்கள் நால்வரும் வீட்டின் சூழலை புரிந்து கொள்ளும் குழந்தைகள் என்பதால், காசு கேட்க மாட்டோம், கேட்டாலும் கிடைக்காது. நாங்களே சிறு சிறு வயல் வேலைகளுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் இட்லி வாங்கி சாப்பிடுவோம்.”

கோபி: நீங்கள் நடித்த சில படங்கள் வெளியான போது பெரிய வரவேற்பு கிடைத்திருக்காது. ஆனால் காலம் கடந்து அவை கொண்டாடப்படும் போது உங்களுக்கு என்ன தோன்றும்?"

தனுஷ்: "வருத்தமும் இருக்கும் சந்தோஷமும் இருக்கும். இதை அப்போது கொண்டாடவில்லையே என வருத்தம் இருக்கும். பரவாயில்லை இப்போதாவது கொண்டாடுகிறார்களே என சந்தோஷமாகவும் இருக்கும்."

கோபி: "சந்தோஷத்தில் நிறைய பேர் கூட இருப்பார்கள். கஷ்டத்தில் கொஞ்சமாகவே இருப்பார்கள். உங்கள் கஷ்டத்தில் உடன் இருந்தது யார்?"

தனுஷ்: "அதைத்தான் ஒரு பாடலாகவே இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன். `எம்பாட்டன் சாமி வரும், எங்கேயும் கூட வரும்' என எழுதி இருப்பேன். அது படத்திற்கான வரிகள் என்பதால் ஒன்றை சேர்க்க முடியவில்லை. அது என் ரசிகர்களை.