Deepa Balu Heart Beat
கோலிவுட் செய்திகள்

`ஹார்ட் பீட்'லிருந்து விலகலா... தீபா பாலு சொல்வது என்ன? | Heart Beat | Reena | Deepa Balu

அவர் அந்தப் பதிவை வெளியிட்டதிலிருந்து, உண்மையானதா அல்லது அது வெறும் விளம்பர உத்தியா என்று ரசிகர்கள் அதன்கீழ் பரபரப்பாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Johnson

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிரபலமான வெப் சீரிஸ் `ஹார்ட் பீட்'. இந்த தொடரில் அனுமோல், கார்த்திக் குமார், தீபா பாலு, சாருகேஷ் எம்,சபரீஷ், யோகலட்சுமி, ஆர்.ஜி.ராம், மோகன் ராமன், படினிகுமார், குரு லட்சுமணன், சர்வா, அமித் பார்கவ், அக்ஷதா அஜித், சிவராமன் எம், மற்றும் அப்துல் லீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இரண்டு சீசன்களாக வந்திருக்கும் இந்தத் தொடருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்த தொடரில் ரீனா என்ற முதன்மைப் பாத்திரத்தில் நடித்த தீபா பாலு பதிவிட்ட ஒரு இன்ஸ்டா பதிவுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. "சிலரை சில இடங்களில் விட்டுப் பிரிவது எளிதல்ல. ஆனால் சில 'பிரிவுகள்' நமது நன்மைக்காகவே அமைகின்றன. என்றும் நன்றியுடன், மிக்க நன்றி" என்று எழுதியிருந்தார். அவர் ' ஹார்ட் பீட் ' தொடரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தப் பதிவின் இறுதியில் 'ரீனா' என்று கையொப்பமிட்டதோடு, தனது தலைப்பில் அந்தத் தொடரை ஒரு குறிச்சொல்லாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அந்தப் பதிவை வெளியிட்டதிலிருந்து, உண்மையானதா அல்லது அது வெறும் விளம்பர உத்தியா என்று ரசிகர்கள் அதன்கீழ் பரபரப்பாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர் தொடரிலிருந்து முழுவதுமாக விலகவில்லை என்றும், மாறாக, தொடரில் தனது தந்தை விஜயுடன் டாக்டர் ராதி மற்றும் அர்ஜுனிடமிருந்து (சாருகேஷ் எம்) விலகிச் செல்வதையே குறிப்பிடுகிறார் என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

Deepa Balu

இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் ’ஹார்ட் பீட்’ பற்றி பேசிய தீபா பாலு, "ஹார்ட் பீட் துவங்கியதிலிருந்து இது மூன்றாவது வருடத்துக்குள் நுழைகிறோம். ஒரு சின்ன குழுவாக துவங்கி, இப்போது இவ்வளவு பெரிய அன்பை சம்பாதித்திருக்கிறோம். ஒவ்வொரு பாத்திரமும் அனைவருக்கும் அவ்வளவு பிடித்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், எங்களது குழுதான். ஹாட் பீட் சீசன் 3 சீக்கிரமே வரும். அதன் படப்பிடிப்புகள் துவங்கிவிட்டன" எனக் கூறி இருக்கிறார்.