Updates November
கோலிவுட் செய்திகள்

ரஜினிகாந்த் முதல் ராஜமௌலி வரை நவம்பரில் வரும் UPDATES! | Rajini | SSMB29 | Jana Nayagan | AK64

SSMB29 படத்தின் தலைப்பை நவம்பர் 15ம் தேதி அறிவிக்க உள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த நிகழ்வு நடக்க உள்ளது, இந்நிகழ்வை ஹாட்ஸ்டார் ஒளிபரப்ப உள்ளது.

Johnson

இந்த நவம்பர் மாதத்தில் நிறைய ஆச்சர்யமூட்டும் சினிமா தகவல்கள் வெளியாக உள்ளது. அவற்றில் முதலாவதாக ஷாரூக்கானின் `கிங்' பட டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி வெளியானது. இதனையடுத்து, இன்னும் பல விஷயங்கள் வர இருப்பதாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் புது பட அறிவிப்பு துவங்கி ராஜமௌலி பட அப்டேட் வரை ஐந்து விஷயங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

Rajini - Sundar C Update

Rajini Sundar C

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பு இந்த வாரம் வரும் என சொல்லப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. எனவே கமல்ஹாசன் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் இதுவே என்கிறார்கள்.

JanaNayagan First Single

Jana Nayagan

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் முதல் வாரத்தில் வர உள்ளது. இந்தப் பாடலை விஜயே பாடி உள்ளார் எனவும், தளபதி கட்சேரி என்பதே பாடலின் பெயர் எனவும் முன்பு சொல்லப்பட்டது. இந்தப் பாடல் தான் முதல் சிங்கிளாக வருகிறதா என பொறுத்திருந்து பாக்கலாம்.

AK64 Update

Ajith, Aadhik

அஜித்குமார் நடிக்கும் படைத்த படத்தை ஆதிக் இயக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு படத்தின் தலைப்போடு வெளியாக உள்ளது என்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என சொல்லப்படுகிறது.  

Parasakthi First Single

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள `பராசக்தி' படத்தின் முதல் பாடல் இந்த வாரம் வெளியாகிறது. இசையமைப்பாளரை ஜிவி பிரகாஷுக்கு இது 100வது படம். இப்பாடல் வெளியாவது பற்றி சமூக வலைத்தளங்களில் ஜிவியே பதிவிட்டுள்ளார்.

SSMB29

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் `SSMB29'. ராஜமௌலி RRR படத்தை துவங்கும் முன் அதனைப் பற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து, அதனை அறிவித்தார். இப்போது SSMB29 படத்தின் தலைப்பை நவம்பர் 15ம் தேதி அறிவிக்க உள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த நிகழ்வு நடக்க உள்ளது, இந்நிகழ்வை ஹாட்ஸ்டார் ஒளிபரப்ப உள்ளது. இதனை Women’s World Cup Final ஒளிபரப்பான போது SSMB29 நிகழ்வின் அறிவிப்பை கிட்டத்தட்ட நூறு முறை ஒளிபரப்பி இருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு `வாரணாசி' என தலைப்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் உலவுகின்றன.