Chithambaram Balan
கோலிவுட் செய்திகள்

`மஞ்சுமெல் பாய்ஸ்' சிதம்பரத்தின் `பாலன்' பட ட்ரெய்லர் வெளியீடு! | Balan | Chithambaram

இப்போது சிதம்பரம் `பாலன்' படத்தை எழுதி, இயக்கியுள்ளார். `ஆவேஷம்' இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

Johnson

Jan.E.Man படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். இப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய `மஞ்சுமெல் பாய்ஸ்' மிகப்பெரிய ஹிட்டானது. மலையாளத்தில் மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்றாலும் மொழி எல்லைகள் தாண்டி பலராலும் கொண்டாடப்பட்டது. மேலும் படத்தில் ’குணா’ பட ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டு வந்தது, ’கண்மணி அன்போடு’ பாடல் பயன்படுத்தியது என பல ஹைலைட். அதில் உச்சபட்சமாக கமல்ஹாசன் படக்குழுவை அழைத்துப் பாராட்டினார்.

இப்போது சிதம்பரம் `பாலன்' படத்தை எழுதி, இயக்கியுள்ளார். `ஆவேஷம்' இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.  கேன்ஸ் திரைப்பட விழாவின் (Cannes Film Festival 2026) ஒரு பகுதியான 'மார்ச் டு ஃபிலிம்'-ல் (Marché Du Film) மே 14ஆம் தேதி இப்படம் திரையானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். விஜய் நடித்துள்ள `ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் (KVN Productions) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (Thespian Films) இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.