Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் முகநூல்
கோலிவுட் செய்திகள்

"Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாதது" - பாடகி சின்மயி பதில்!

யூடியூப் டிரெண்டிங்கில் 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ள ‘முத்தமழை’ பாடல், 3 மில்லியன்களை பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மீ டூ' சர்ச்சையைத் தொடர்ந்து பாடகி சின்மயி தமிழ் திரைப்படங்களில் ஒரு சில பாடல்கள் மட்டும் பாடி வந்தார்.

இந்தநிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் , சிம்பு , திரிஷா , அபிராமி , அசோக் செல்வன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படத்தின் பாடல்களை இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி பாடியிருக்கிறார். தமிழில் தீ இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தக் லைஃப் படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்த மழை' பாடலை சின்மயி மேடையில் பாடினார். இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது .

இந்த பாடல், யூடியூப் டிரெண்டிங்கில் 4வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும், இதன் வீடியோ 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தவரிசையில், ஒரிஜினல் வெர்ஷனைவிட சின்மயின் குரலில் அருமையாக இருக்கிறது என்றும், இவர் ஏன் இத்தனை காலம் பாடவில்லை என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்ப தொடங்கினர்.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற சின்மயி, இந்த ஒப்பீடு தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாதது; சம்மந்தமே இல்லாமல் மல்யுத்தப் போட்டியில் எங்களை போட்டியிட சொல்லது போல இது உள்ளது: கலைஞர்களாக நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாளராக நினைப்பதில்லை. திறமைகளைக் கண்டு வியக்கவே செய்கிறோம்.

இன்னும் 15 வருடங்களில் Dhee, 100 சின்மயிக்களையும் 100 ஷ்ரேயா கோஷலையும் தாண்டிகூட போகலாம். இப்போது அவர் ஒரு சிறு பெண், அவர் குரலை என் குரலோடு ஒப்பிட்டு பேசுவது தேவையில்லாதது. என்னையும் என்னுடைய 18, 20 வயதுகளில் பாட சொல்லியிருந்தால், இப்படி பாடியிருக்க மாட்டேன். அனுபவத்தினாலேயே எனக்கும் இது வந்துள்ளது. எங்கள் குரல்கள் ஒப்பீடு செய்யப்பட்டதற்கு, நான் Dhee-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.