Jiiva Thalaivar Thambi Thalaimaiyil
கோலிவுட் செய்திகள்

"சென்சார் வெச்சு செஞ்சாங்க... 48 கட் குடுத்தாங்க!" - ஜீவா | Jiiva | Thalaivar Thambi Thalaimaiyil

முதலில் ஜனவரி 30-ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஒரு பெரிய படம் வராததால் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டது. எனவே பொங்கலுக்கு தியேட்டர்கள் கிடைப்பதால், வரும் ஜனவரி 15-ஆம் தேதியே படத்தை வெளியிடுகிறோம்.

Johnson

ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள படம், `தலைவர் தம்பி தலைமையில்'. ஜனவரி 30ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம், `ஜனநாயகன்' வெளியாகாத நிலையில் ஜனவரி 15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய ஜீவாவிடம், ’உங்கள் படத்துக்கு சென்சார் எதுவும் வருவதில்லையே’ எனக் கேட்கப்பட, "சென்சாருக்கு  BRAND AMBASSADOR நான்தான். 'ஜிப்ஸி' என ஒரு படம் நடித்தேன், அதில் மொத்தம் 48 கட். என்னைத்தான் முதலில் செஞ்சாங்க. படம் BLACK & WHITE-இல் எல்லாம் ஓடியது. சென்சார் பிரச்னைகள் முடிந்து தியேட்டருக்கு வந்தால், கொரோனா வந்துவிட்டது. ரெண்டு 'C'யும் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாகிவிட்டது" என்றார்.

மேலும், `ஜனநாயகன்' படம் தள்ளிப்போவது பற்றி பேசியவர், "முதலில் ஜனவரி 30-ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஒரு பெரிய படம் வராததால், வெற்றிடம் ஒன்று ஏற்பட்டது. எனவே, பொங்கலுக்கு தியேட்டர்கள் கிடைப்பதால், வரும் ஜனவரி 15-ஆம் தேதியே படத்தை வெளியிடுகிறோம்.

ஜனநாயகன்

விஜய் சாரின் ‘ஜனநாயகன்' படம் வெளியாகாதது வருத்தம். திரையுலகில் பலருக்கும் அவர் உறுதுணையாக இருந்துள்ளார். நாங்கள் அவருடன் 7 படங்கள் பணியாற்றியுள்ளோம். எங்களுடைய ஆதரவும் அவருக்கு இருக்கும். அவரது படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.