அர்ஜூன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கி மே 28 வெளியான படம் `ப்ளாஸ்ட்'. ஆக்ஷன் படமான இது திரையரங்கில் பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் நாள் இப்படத்தின் வசூல் இந்திய அளவில் 1.25 கோடி எனச் சொல்லப்பட்டது. இன்றோடு படம் வெளியாகி 37 நாட்களைக் கடந்து திரையரங்கில் ஓடி வருகிறது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இப்போது இந்தப் படத்தின் வசூல் உலகளவில் 76+ கோடி என அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு வெளியான லாபகரமான படங்களில் ஒன்றாக இதுவும் இணைந்துள்ளது. தமிழ் மட்டுமில்லாது படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஜூன் 25ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. அதேவேளையில், இப்படம் இப்போதும் திரையரங்குகளில் சில காட்சிகள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே, வசூல் இன்னும் அதிகமாகலாம் எனச் சொல்லப்படுகிறது.