ஆதிபுருஷ்
ஆதிபுருஷ் ட்விட்டர்
கோலிவுட் செய்திகள்

“இந்துக்கள், சனாதன தர்மத்தின் மதஉணர்வுகளை புண்படுத்துகிறது”-ஆதிபுருஷ்க்கு எதிராக மற்றொரு போர்க்கொடி

PT WEB

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், பல்வேறு தரப்பினர் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை விதிக்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தில், ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் கதை, வசனங்கள் மற்றும் ராமர், அனுமர் ஆகிய கடவுள்களின் உருவத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இந்துக்கள் மற்றும் சனாதன தர்மத்தின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. திரைப்படத்தில் ராமரையும், ராவணனையும் கூட வீடியோ கேமின் கேரக்டராக சித்தரிக்கிறது.

நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் புண்படுத்தும் விதமாக வசனங்கள் உள்ளன. எனவே திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஓடிடி தளங்களிலும் ‘ஆதிபுருஷ்’ திரையிடலை தடை செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இத்திரைப்படத்தின் இயக்குநர் ஓம் ராவத், எழுத்தாளர் மனோஜ் முன்டாசிர் சுக்லா மற்றும் தயாரிப்பாளர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.