Arya Mr X
கோலிவுட் செய்திகள்

"20 அடி ஆழ தண்ணீரில், நடுங்கும் குளிரில் படப்பிடிப்பு!" - மிஸ்டர் X அனுபவம் சொன்ன ஆர்யா | Mr X

பெரும்பாலும் இந்திய சினிமாவில் இதுபோன்ற தண்ணீருக்கடியிலான காட்சிகள் ஆறு அடி ஆழத்தில் மூழ்கிய மேடைகளைப் பயன்படுத்திதான் படமாக்கப்படுகின்றன. ஆனால் மிஸ்டர் Xஇல் ஆர்யா ஆழமான கடலில் 20 அடி ஆழத்திற்கு உள்ளே செல்வதுபோல தத்ரூபமாக சித்தரிக்க வேண்டியிருந்தது.

Johnson

ஆர்யா, கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார் நடிப்பில் மனு ஆனந்து இயக்கியுள்ள படம் ‘மிஸ்டர் X’. இப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் தண்ணீருக்கு அடியில் ஆர்யா நடிக்க வேண்டும். எனவே, அதற்காக தண்ணீருக்கு அடியில் இருக்க பயிற்சி எடுத்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் தொடக்க காட்சியானது மும்பையில் உள்ள 20 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது.

இதுபற்றி படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் கூறுகையில், “பெரும்பாலும் இந்திய சினிமாவில் இதுபோன்ற தண்ணீருக்கடியிலான காட்சிகள் ஆறு அடி ஆழத்தில் மூழ்கிய மேடைகளைப் பயன்படுத்திதான் படமாக்கப்படுகின்றன. ஆனால் மிஸ்டர் X-இல் ஆர்யா ஆழமான கடலில் 20 அடி ஆழத்திற்கு உள்ளே செல்வதுபோல தத்ரூபமாக சித்தரிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த ஆழம்தான் ஆர்யாவுக்கு உடல் ரீதியான மிகுந்த சவால்களைக் கொண்டு வந்தது., குறிப்பாக 15 முதல் 16 டிகிரி வரை இருந்த நீரின் வெப்பநிலை மிகவும் கடினமான சோதனையாக இருந்தது. தமிழ் சினிமா இதுவரை முயற்சிக்காத ஒன்றை இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டு, உடலில் எந்த ஆடையும் இல்லாமல், பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் 20 அடி ஆழத்திற்கு இறங்கினார்” என்கிறார்.

இந்த அனுபவம் குறித்து நாயகன் ஆர்யா கூறும்போது, “நாம் ஆழமாக இறங்க இறங்க, நீரின் வெப்பநிலை குறைந்து சுமார் 15 முதல் 16 டிகிரி வரை இருந்தது, பனிக்கட்டி போன்ற குளிர்ந்த நீரில். உடலில் ஆடையின்றி நடிக்கும்போது, உடல் நடுங்கக் கூடாது. 30 முதல் 40 வினாடிகள் மூச்சை அடக்கிக்கொண்டே நடுக்கத்தை கட்டுப்படுத்துவது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த காட்சியை படமாக்க தேவையான சாதனங்களை.

Arya

தண்ணீருக்குள் கொண்டு செல்வதற்காக திரும்பத் திரும்ப மேலே ஏறி கீழே இறங்குவதால் ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்ப்பதற்காக நானும், கேமரா குழுவினரும் ஒவ்வொரு முறையும் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை தொடர்ச்சியாக நீருக்கடியிலேயே இருந்தோம். இது எனது திரையுலக வாழ்க்கையிலேயே மிகவும் உடல் ரீதியாக சவாலான அனுபவம். படப்பிடிப்பில் மிகுந்த கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் தொழில்நுட்ப ரீதியாக அனைத்தும் கச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது... தண்ணீருக்கடியிலான ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் மூலம், இயக்குநர் மனு ஆனந்தின் அறிவுறுத்தல்களை தாம் கேட்கவும், காட்சிகளுக்கு இடையே தனது நடிப்பு குறித்த நேரடியான கருத்துக்களை பெறவும் முடிந்தது" என்று கூறியுள்ளார்.