Arjun Das, Aditi Shankar Once More
கோலிவுட் செய்திகள்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கரின் `ஒன்ஸ்மோர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Once More | Arjun Das | Aditi

‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த அவர் ஹேஷாம் அப்துல் வஹாப்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Johnson

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘ஒன்ஸ்மோர்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, ராஜ் கமல் கலை இயக்கம், நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர் என திறமையான குழு இப்படத்தில் இணைந்துள்ளது. ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே வெளியான டைட்டில் டீசர் மற்றும் “இந்திரா”, “வா கண்ணம்மா” பாடல்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் உருவாகியுள்ளது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார். இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.