Simbu Arasan
கோலிவுட் செய்திகள்

மதுரைல `அரசன்' ஷூட், நேரா அங்கதான் போறேன்! - அப்டேட் தந்த சிம்பு | Simbu | Arasan

தமிழ் சினிமாவில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை. அந்த சினிமா உள்ளே சிலர் குருமா செய்கிறார்களே, அதை எல்லாம் மாற்றுவேன்.

Johnson

மலேசியாவில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிம்பு, மலேசிய மக்களின் அன்புக்கு நிகரானது எதுவும் இல்லை எனக் கூறினார். தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட போது, 'நாம் ஒழுங்காக, சந்தோஷமாக இருக்கிறோமா என்பதே முக்கியம்' என்றார். மதுரையில் 'அரசன்' பட ஷூட்டிங் 9ம் தேதி தொடங்கவுள்ளது என அறிவித்தார்.

மலேசியாவில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார் நடிகர் சிம்பு. அங்கு அவர் பேசிய போது "இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியா லவ் பண்ணேன்னு படத்துல வர்ற டயலாக் போல, இந்த உலகத்தில் எவ்வளவோ மக்கள் இருந்தாலும், மலேசிய மக்களின் அன்புக்கு இணையே ஆகாது. ரொம்ப வருடங்களாக நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்றார்.

சிம்பு

சிம்புவின் திருமணம் எப்போது எனக் கேட்கப்பட "இதுவரை எனக்கு 120 முறை கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதெல்லாம் நடக்கும் போது நடக்கும். நாம் தனியாக இருக்கிறோமா, யாருடனாவது இருக்கிறோமா என்பது விஷயம் அல்ல. ஒழுங்காக இருக்கிறீர்களா? சந்தோஷமாக இருக்கிறீர்களா? சுற்றி இருப்பவர்களை நிம்மதியாக வைத்திருக்கிறீர்களா? அது போதும். ரொம்ப அடிவாங்கி இருக்கிறேன், அதிலிருந்து வந்த தெளிவு தான் இது" என்றார்.

உங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு விஷயத்தை மாற்ற முடியும் என்ற சக்தி கிடைத்தால் எதை மாற்றுவீர்கள் எனக் கேட்கப்பட "தமிழ் சினிமாவில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை. அந்த சினிமா உள்ளே சிலர் குருமா செய்கிறார்களே, அதை எல்லாம் மாற்றுவேன்" என்றார்.

சிம்பு

தன் ரசிகர்களை பற்றி பேசுகையில் "நட்பு என எடுத்துக் கொண்டால், எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஆனால் நீங்கள் ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது, பிரச்சனையில் இருக்கும் போது யார் துணை நிற்கிறார்களோ, தோள் கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் உண்மையான நண்பர்கள். அப்படி என் ரசிகர்கள் எப்போதும் எனக்கு பிரச்சனை வந்தபோது நின்றிருக்கிறார்கள்" என்றார். இறுதியாக அரசன் பட அப்டேட் சொல்லும் போது "மதுரையில் 9ம் தேதியிலிருந்து `அரசன்' பட ஷூட்டிங் துவங்குகிறது. இங்கிருந்து நேரடியாக ஷூட்டிங் செல்ல இருக்கிறேன்" என்றார் சிம்பு.