Thanu Arasan
கோலிவுட் செய்திகள்

” ’அரசன்’ ஈடு இணையில்லாத ஒரு வெற்றி பெறும்!” - தாணு | Arasan | Thanu | STR | Vetrimaaran

‘அரசன்’ வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஒரு உலுக்கு உலுக்கும்.

Johnson

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அசுரன்’. இப்படத்தின் அறிவிப்பு, புரோமோ வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு உருவானது. மேலும் இது வடசென்னை உலகத்தில் நிகழும் கதை என்பதும், படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்பதும் கூடுதல் சர்ப்ரைஸ். இப்படத்துக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார் சிம்பு.

Arasan

இப்போது அந்தக் காட்சிகள் நிறைவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு நோக்கி நகர்ந்துள்ளது படம். சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவிடம், `அரசன்' பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன தாணு, "நேற்று இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினேன். படத்தின் செய்திகளை இயக்குநர்தான் சொல்ல வேண்டும். ஆனால், ‘அரசன்’ வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும். ஒவ்வொரு ஃபிரேமிலும் அதற்கான வேலைப்பாடு இருக்கிறது. ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அந்தப் படம் பெறும்" எனக் கூறியுள்ளார்.