அனுபமா பரமேஸ்வரன்நடிப்பில் ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள படம் `லாக்டவுன்'. சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், அபிராமி, ரேவதி எனப் பலரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது தித்வா புயல் காரணமாக படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். பின்னர் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தபோது, "எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறது என அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இப்போது படம் ஜனவரி 30ஆம் தேதி வெளியாகும் என புது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம் லைகா.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலகட்டத்தின் போது ஒரு பெண் சந்திக்கும் சிக்கல்களும் போராட்டங்களும், மேலும் அதிலிருந்து வெளியே வர எவ்வாறு ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை த்ரில்லராக சொல்லும் படமே இது. இந்த படம் சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.