Anne Hathaway The End of Oak Street
கோலிவுட் செய்திகள்

ஜூலையில் ‘The Odyssey’, ஆகஸ்டில் `The End of Oak Street'.. அசத்தும் அன்னா ஹாத்தவே! | Anne Hathaway

மர்மமான ஒரு விண்வெளி நிகழ்வு எப்படி பிளாட் குடும்பத்தை பாதிக்கிறது என்பதே படத்தின் ஒன்லைன்.

Johnson

அன்னா ஹாத்தவே மற்றும் யூவான் மெக்கிரெகர் நடிப்பில், தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்ட்ரீட்டில் மைசி ஸ்டெல்லா மற்றும் கிறிஸ்டியன் கான்வெரி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் டேவிட் ராபர்ட் மிட்செல். அன்னா ஹாத்தவே நடிப்பில் ஜூலை மாதம் ‘ தி ஒடிஸி’ என்றால், ஆகஸ்ட் மாதம் The End of Oak Street வெளியாகவிருக்கிறது. மர்மமான ஒரு விண்வெளி நிகழ்வு எப்படி பிளாட் குடும்பத்தைப் பாதிக்கிறது என்பதே படத்தின் ஒன்லைன். சர்வைவல் ஹாரர் பாணி சினிமா என்றால், காமெடி கலந்து இந்த திரைப்படத்தை எழுதியிருக்கிறாராம் இதன் எழுத்தாளரான டேவிட் ராபர்ட் மிச்சல். ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்தப் படம்.

இப்படம் பற்றி நடிகர் மெக்கிரெகர் கூறுகையில், "இந்தத் திரைப்படத்தின் வித்தியாசமான திரைக்கதைதான் என்னை ஈர்த்தது. 1980களின் ஸ்பீல்பெர்க் குடும்பத் திரைப்படம் போன்ற ஒன்று. கதை எதை நோக்கிச் செல்கிறது என்பதை யூகிக்க முடியாதவண்ணம் அதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். ஆனால், எனக்குப் பிடித்தது என்னவென்றால், கதையின் கதாபாத்திரங்களுக்குள் ஏதோ ஒரு சிக்கல் ஒன்று இருந்தது.

இந்த 1980களின் வாழ்க்கையில், இந்த அமெரிக்கானா உணர்வுகளுக்கு மத்தியில் அவர்களின் திருமணத்தில் சில அதிருப்தி இருந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது. பிறகு டைனோசர்கள் வருகின்றன. நான் படிக்கும்போதே என்ன நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. உங்கள் உயிருக்காக ஓடுவது, ஒரு பெரிய, இடைவிடாத டைனோசரால் துரத்தப்படுவது பார்ப்பதற்கும் செய்வதற்கும் எல்லையற்ற வேடிக்கையாக இருக்கிறது.

Anne Hathaway

அவர்கள் ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் தங்கள் உயிருக்காகப் போராடுகிறார்கள், ஆனால், அதில் நகைச்சுவையும் இருக்கிறது; சில உண்மையான வேடிக்கையான தருணங்கள் உள்ளன” என்றார்.