Anil Ravipudi Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

”விஜய் சாருக்கு `பகவந்த் கேசரி' கதை மிகவும் பிடித்தது!” - அனில் ரவிப்புடி | Vijay | Jana Nayagan

படத்தின் அடிப்படையான ஆன்மாவை எடுத்துக் கொண்டு மற்றவரை அவர்கள் மாற்றியுள்ளனர். துவக்கத்தில் 15 - 20 நிமிடங்கள், இடைவேளை காட்சி, இரண்டாம் பாதியில் சில முக்கியமான காட்சிகள் இவை மட்டுமே எடுத்திருக்கிறார்கள்.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இதில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலினால் தள்ளிப்போனது. இப்படம் தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கிய `பகவந்த் கேசரி' படத்தின் தமிழ் ரீமேக்தான். அனில் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் இயக்கியுள்ள `மன சங்கர வரப்பிரசாத் காரு' படம் இன்று வெளியாகிறது. இது சம்பந்தமாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் `ஜனநாயகன்' குறித்து பகிர்ந்துள்ளார்.

Bagavanth Kesari, Jana Nayagan

`பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்காக `ஜனநாயகன்' உருவாகியுள்ளது பற்றி கேட்கப்பட, "படத்தின் அடிப்படையான ஆன்மாவை எடுத்துக் கொண்டு மற்றவரை அவர்கள் மாற்றியுள்ளனர். துவக்கத்தில் 15 - 20 நிமிடங்கள், இடைவேளை காட்சி, இரண்டாம் பாதியில் சில முக்கியமான காட்சிகள் இவை மட்டுமே எடுத்திருக்கிறார்கள். வில்லன் சார்ந்த கதை, அவனின் நோக்கம் போன்றவற்றை மொத்தமாக மாற்றியுள்ளனர். இதில் ரோபோட் கொண்டு வந்து Sci-Fi ஆக மாற்றி இருக்கிறார்கள். இதை எப்படிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். விஜய் சாருக்கு `பகவந்த் கேசரி' கதையில் இருந்த பல விஷயங்கள் மிகவும் பிடித்தது. யார் என்ன சொன்னாலும் படத்தின் ஆன்மா மிக பலமானது, அதில் விஜய் சாரும் இணைந்துள்ளதால் அது இன்னும் பலமானதாக மாறும்" என்றார்.

மேலும் `ஜனநாயகன்' ட்ரெய்லரையும், `பகவந்த் கேசரி' ட்ரெய்லரையும் ஒப்பிட்டுப் பலரும் பேசுவது பற்றி கேட்கப்பட, "ஒரு ரீமேக் செய்யும்போது, ஒரிஜினல் படத்தில் உள்ள முக்கியமான காட்சிகளை அப்படியே எடுப்பது மிக சாதாரணமான ஒரு விஷயம். கோவிட்க்கு பிறகு யாரும் ரீமேக் படங்கள் எடுப்பதில்லை, அதற்கு முன்பு வரை ரீமேக் அப்படித்தானே எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியில் உருவான படத்தை, வேறு மொழியில் எடுப்பதுதான் ரீமேக். அப்படித்தானே எடுக்க முடியும். ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை.

ஜனநாயகன்

ஏனென்றால், அதன்மூலம் ஒரு நெகடிவிட்டி பரவும் வாய்ப்பு உள்ளது. படத்தை சந்தைப்படுத்தும்போது அது மிகவும் சவாலானது. உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் `பகவத் கேசரி' பார்க்கவில்லைதானே? எனவே தமிழ்ப் பார்வையாளர்களுக்கு இது புது படம்தான். இந்தியில் இருந்து `தபாங்' படத்தை பவன் கல்யாண் தெலுங்கில் `கப்பர்சிங்' என ரீமேக் செய்தார். அது மிகப்பெரிய ஹிட்டானது. அப்படி விஜய் சார் இந்தப் படத்தில் என்ன செய்திருக்கார் என்பதை பார்க்க வேண்டும். வெறுமனே ட்ரெய்லரை பார்த்துவிட்டு பேசுவது சரியாக இருக்காது. விஜய் சாருக்கு இது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஃபேர்வெல் படமாக அமையும் என நம்புகிறேன்" என்றார்.