Roja Lenin Pandiyan
கோலிவுட் செய்திகள்

12 வருடங்களுக்கு பின் சினிமாவில் COMEBACK தரும் ரோஜா! | Roja

கடைசியாக ரோஜா நடித்து 2015ல் `கில்லாடி', `புலன் விசாரணை 2', `என் வழி தனி வழி' போன்ற படங்கள் தமிழில் வெளியானது. 2013க்குப் பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.

Johnson

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. 90களின் துவக்கத்தில் இருந்து சினிமாவில் பிஸியானவர், 1998 இருந்து தொடர்சியாக அரசியலில் இயங்கிவந்தார். 2013க்கு பிறகு முழுவதுமாக சினிமாவிலிருந்து விலகி அரசியல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்போது வரை சினிமாவில் இருந்து தள்ளியே இருந்த ரோஜா மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார்.

பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள `லெனின் பாண்டியன்' படத்தில் சந்தானம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ரோஜா. கடைசியாக ரோஜா நடித்து 2015ல் `கில்லாடி', `புலன் விசாரணை 2', `என் வழி தனி வழி' போன்ற படங்கள் தமிழில் வெளியானது. 2013க்குப் பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். சில தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். எனவே 12 ஆண்டுகளுக்கு பிறகு, சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் ரோஜா.

இப்படத்தில் கங்கை அமரனும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். கங்கை அமரன் துரை ராசு என்ற பாத்திரத்தில் நடிக்கிறார் என சரத்குமார் அறிவித்தார். தற்போது ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை குஷ்பூ வெளியிட்டுள்ளார். சத்யஜோதி தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.