Krishna Sajith Sivakasi
கோலிவுட் செய்திகள்

"நானும் CMகூட நடிச்சிருக்கேன்னு பெருமையா சொல்லுவேன்" - கிருஷ்ணா சஜித் | Krishna Sajith | Sivakasi

அவர் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு நபர், ரொம்பவும் பணிவாக  இருக்கக்கூடியவர். அவருடன் நடித்த அனைவருக்குமே தெரியும், அவர் இப்படியான நிலைக்கு வரக்கூடிய ஆள்தான் என்று.

Johnson

விஜய் நடிப்பில் பேரரசு இயக்கி 2005இல் வெளியான படம் `சிவகாசி'. இப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட் பிரபு எனப் பலரும் நடித்திருந்தனர். இதில் விஜயின் தங்கையாக வைரம் பாத்திரத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணா சஜித். விஜய் முதலமைச்சரானது குறித்து இவரிடம் ஒரு யூடியூப் சேனல் கேள்வி கேட்டது.

அதற்கு பதில் சொன்ன கிருஷ்ணா சஜித், "அவர் மிகவும் கடினமாக உழைக்கக்கூடிய ஒரு நபர், ரொம்பவும் பணிவாக இருக்கக்கூடியவர். அவருடன் நடித்த அனைவருக்குமே தெரியும், அவர் இப்படியான நிலைக்கு வரக்கூடிய ஆள்தான் என்று. நாம் என்ன கேட்டாலும் அதனை உடனடியாகச் செய்து தருவார். உடல்நிலை சரி இல்லாதவருக்கு உதவுவார். அவருக்கு இப்படியான நிறைய தகுதிகள் உண்டு. அதனால்தான் அவருக்கு இப்படி ஓர் இடம் கிடைத்துள்ளது. அதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

Sivakasi

நானும் அவருடன் நடித்திருக்கிறேன், இப்போது அவர் ஒரு சிஎம் என நானும் சொல்லிக் கொள்ளலாம் அல்லவா? அது எனக்கு பெருமையான விஷயம்தான். அவரைத் தொடர்புகொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. படம் முடிந்த சமயத்தில் பேசி இருக்கிறோம். இப்போது அவரது குழுவை தொடர்புகொண்டு நம்பர் வாங்கினேன்.

Krishna Sajith

தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில் வாழ்த்துகள் என மெசேஜ் அனுப்பினேன், அவர் ரிப்ளே செய்தார். அவர் அப்படி குறைவாக பேசும் சுபாவம் கொண்டவர் என அவரோடு பணியாற்றிய அனைவருக்கும் தெரியும். உடன் நடிப்பவர்களை மிகவும் சௌகர்யமாக வைத்துக்கொள்வார்" என்றார்.