நடிகர் சசிகுமார் pt desk
கோலிவுட் செய்திகள்

அரசியலுக்கு சென்றாலும் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் - நடிகர் சசிகுமார் வேண்டுகோள்

விஜய் பெரிய எண்டர்டெய்னர் அவர் மேலும் படங்கள் நடிக்க வேண்டும். பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள். என்று திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ஹாலித் ராஜா

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம், தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூரில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு வருகை தந்த டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்தனர். அப்போது படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

விஜய் - அஜித்

இதையடுத்து ரசிகர்களிடம் இலங்கை தமிழில் பேசி உற்சாகப்படுத்திய சசிகுமார். திரையரங்கில் இருந்த அனைவருடனும் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர், படத்திற்கு வெற்றி தேடித் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சசிகுமார், “நடிகர் விஜய் மேலும் படங்கள் நடிக்க வேண்டும். அவர் பெரிய எண்டர்டெய்னர்; எனவே அரசியலுக்கு சென்றாலும் அவர் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும். அதேபோல நடிகர் அஜித் பத்மபூஷன் விருது பெற்றதற்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார்.