Brad Silberling இயக்கியுள்ள சீரிஸ் `It's Not Like That'. மனைவி ஜெனியை இழந்த மால்கம் தன குழந்தைகளை எப்படி வளர்ப்பது என தவிக்கும் வேளையில் உதவிக்கு வருகிறார் ஜெனியின் தோழி. அதன் பின் நடப்பவையே கதை.
Simon Williams நடித்துள்ள சூப்பர்ஹீரோ சீரிஸ் `Wonder Man'. சூப்பர் பவர் கிடைக்கும் ஹீரோவுக்கு வரும் சவால்களே கதை.
சுரேஷ் த்ரிவேனி இயக்கத்தில் புமி பெட்னாகர் நடித்துள்ள சீரிஸ் `Daldal'. தன்வாழ்க்கையே சிக்கலில் தவிக்கும் சூழலில் ஒரு தொடர் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொறுப்பு டிசிபி ரீட்டாவுக்கு வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
Jason Momoa, Dave Bautista இணைந்து நடித்துள்ள படம் `The Wrecking Crew'. இரண்டு சகோதரர்கள் தங்களின் தந்தை மரணத்துக்கு பின் இருக்கும் சதியை அம்பலப்படுத்த முயல்வதே கதை.
நஸ்ருதீன் ஷா, விஜய் வர்மா, ஃபாத்திமா சனா சைக் நடித்த படம் `Gustaakh Ishq'. எழுத்தாளரிடம் பாடம் கற்க போகும் இளைஞன், அவரது மகளுடன் காதல் கொள்ள,, அதன் பின் நடப்பவையே கதை.
`Constantine', `I Am Legend' படங்களை இயக்கிய Francis Lawrence தற்போது இயக்கிய படம் `The Long Walk'. மலை ஏறும் போட்டியில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் கதை.
கார்த்தி நடிப்பில் நலன் இயக்கிய படம் `வா வாத்தியார்'. நம்பியாராக இருக்கும் ஹீரோ எம் ஜி ஆர் ஆவதால் வரும் சிக்கல்களே கதை.
ரோஷன் - அனஸ்வரா நடித்த படம் `Champion'. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் சிக்கந்தராபாத்தில் கால்பந்து வீரனாக ஆசைப்படும் இளைஞனின் கதை.
பிரனீத் இயக்கிய படம் `Patang'. பட்டம்விடும் போட்டியினூடாக மூன்று நண்பர்களின் வாழ்க்கையை பற்றி சொல்லும் படம்.
அகில் சத்யன் இயக்கத்தில் நிவின் பாலி, அஜூ வர்கீஸ் நடித்த படம் `Sarvam Maya'. ஒரு இளைஞன், பேயை பார்த்த பின்பு நடக்கும் விஷயங்களே படம்.
விஜய் சேதுபதி, அர்விந்த் சுவாமி, அதிதிராவ் ஹைதரி நடித்துள்ள படம் `Gandhi Talks'. வேலை வாய்ப்புக்காக முயலும் மஹாதேவ், தன தொழில் சாம்ராஜ்யத்தை இழக்கும் நிலையில் உள்ள போஸ் இருவரின் வாழ்வில் நடப்பதை மௌனப்படமாக சொல்கிறது `Gandhi Talks'.
அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம் `Lockdown'. ஒரு பெண் மிக முக்கியமான விஷயமாக வெளியே சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது கொரோனா லாக்டவுன் அமலாகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதே கதை.
தினேஷ், கலையரசன் நடித்துள்ள படம் `கருப்பு பல்சர்'. சென்னையை சேர்ந்த இளைஞனுக்கும், கிராமத்தை சேர்ந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் மோதலே கதை.
வடிவுக்கரசி, திலீபன், சிங்கம் புலி நடித்துள்ள படம் `க்ரானி'. வயதான மூதாட்டியின் வருகைக்கு பிறகு அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களே கதை.
கிஷோர் நடித்துள்ள படம் `மெல்லிசை'. பெற்றோரின் கடந்த கால நினைவுகளை காக்க நினைக்கும் பிள்ளைகளின் கதை.
ஆஸ்னா சாவேரின், முனீஸ்காந்த் நடித்துள்ள படம் `திரைவி'. ஒரு பெண்ணின் தற்கொலையை ஒரு திருடன் தடுக்க, அதன் பின் நடக்கும் விளைவுகளே கதை.
`தும்பாட்' படம் மூலம் கவனம் ஈர்த்த ரஹி அனில் இயக்கியுள்ள படம் `Mayasabha'. தங்க புதையலை தேடுதல் வேட்டையின் போது நடக்கும் விஷயங்களே கதை.
மலையாளத்தில் வெளியான `Jaya Jaya Jaya Jaya Hey' படத்தின் தெலுங்கு ரீமேக் தான் `Om Shanti Shanti Shantihi'. தன்னை மோசமாக நடத்தும் கணவனை, மனைவி எப்படி கையாள்கிறார் என்பதை காமெடியாக சொல்லும் படம்.
ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள படம் `Valathu Vasathe Kallan' சாமுவேல் ஜோசப் தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான வழக்கை தீர்க்க ஆண்டனி சேவியரை அழைக்கிறார். இருவரும் குறித்த நேரத்தில் உண்மையை கண்டறிந்தார்களா என்பதே கதை.
விஜேஷ் இயக்கியுள்ள படம் `Prakambanam '. ஹாஸ்டலில் இருக்கும் மூன்று விட்டேத்தியான நண்பர்களுக்கு வரும் ஒரு சிக்கல், அதை தீர்ப்பதில் நடக்கும் காமெடிகளே கதை.
சுதர்ஷனன் இயக்கியுள்ள படம் `Christina'. ஒரு கிராமத்துக்கு வரும் சேல்ஸ் கேர்ள் காணாமல் போகிறார், அவர் என்ன ஆனார் என்ற விசாரணையே கதை.
ராணி முகர்ஜி நடித்துள்ள படம் `Mardaani 3'. இம்முறை காவலர் சிவாஜி ஷிவானி ராய் தீர்க்கும் வழக்கு என்ன என்பதே கதை.
Jason Statham நடித்துள்ள படம் `Shelter'. கடலில் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றும் ஹீரோ, அதைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் சிக்கல்களே கதை.
Sam Raimi இயக்கியுள்ள படம் `Send Help'. பாலைவனத்தில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்ணின் சர்வைவல் கதையே படம்.