Mangatha x page
கோலிவுட் செய்திகள்

`மங்காத்தா' ரீரிலீஸ் முதல் நிவின் பாலியின் `Baby Girl' | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் தியேட்டரில் அஜித்தின் `மங்காத்தா', ஓடிடியில் GOTயின் ப்ரீக்குவல் `A Knight of the Seven Kingdoms' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

Johnson

Series: A Knight of the Seven Kingdoms (English) Jio Hotstar - Jan 19

A Knight of the Seven Kingdoms

Game of Thrones சீரிஸின் prequel ஆக உருவாகியுள்ளது A Knight of the Seven Kingdoms. Ser Duncan the Tall என்ற பாத்திரத்தின் கதையாக விரியும் சீரிஸ் இது. வாரா வாரம் ஒரு எபிசோடாக வெளியாகவுள்ளது.

Steal (English) Prime - Jan 21

Steal

Sam Miller, Hettie Macdonald இயக்கத்தில் Sophie Turner நடித்துள்ள சீரிஸ் `Steal'. ஒரு பெரிய கொள்ளைக்கு நடுவே சிக்கிக்கொள்ளும் பெண்ணின் கதை.

Drops of God S2 (English) Apple tv+ - Jan 21

Drops of God S2

Oded Ruskin இயக்கிய சீரிஸ் `Drops of God'. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. ஒரு தொழிலதிபரின் இருவேறு மனைவிக்கு பிறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் போட்டியே இதன் கதை.

Finding Her Edge (English) Netflix - Jan 22

Finding Her Edge

Shamim Sarif, Jacqueline Pepall இயக்கியுள்ள சீரிஸ் `Finding Her Edge'. Adrianna தன்னுடன் ஐஸ் ஸ்கெட்டிங் பார்ட்னராக வருபவருடன் கொள்ளும் காதல் பற்றிய கதை.

Space Gen: Chandrayaan (Hindi) Jio Hotstar - Jan 23

Space Gen Chandrayaan

அனந்த் சிங் இயக்கத்தில் ஸ்ரேயா சரண், நடித்துள்ள சீரிஸ் `Space Gen: Chandrayaan'. இந்திய விண்வெளி பொறியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களே கதை.

OTT: Salliyargal (Tamil) Aha - Jan 20

Salliyargal

கிட்டு இயக்கியுள்ள படம் `சல்லியர்கள்'. ஈழப் போரில் மருத்துவர்களின் பங்களிப்பு என்ன என்பதைச் சொல்லும் படம்.

Cheekati Lo (Telugu) Prime - Jan 23

Cheekati Lo

ஷரண் கோபிசெட்டி இயக்கத்தில் ஷோபிதா துலிபாலா நடித்துள்ள படம் `Cheekati Lo'. தொடர்ந்து பாலியல் குற்றங்களை செய்யும் ஒருவனை தேடும் முயற்சிகளே கதை.

La grazia (Italian) Mubi - Jan 23

La grazia

`The Hand of God' படம் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் Paolo Sorrentino இயக்கியுள்ள படம் `La grazia'. இத்தாலிய பிரதமரின் உளவியல் சிக்கல்களை மையமாக கொண்ட படம்.

Post Theatrical Digital Streaming: Eddington (English) Jio Hotstar - Jan 18

Eddington

`Hereditary', `Midsommar', `Beau Is Afraid' என சிறந்த படங்களை கொடுத்த Ari Aster இயக்கத்தில் உருவான படம் `Eddington'. நகரத்தின் மேயர் பதவிக்கு போட்டியிடும் இருவர் பற்றிய கதை.

Splitsville (English) Prime - Jan 18

Splitsville

Michael Angelo Covino இயக்கிய படம் `Splitsville'. மனைவி ஆஷ்லி விவாகரத்து கேட்டதும் கேரி செய்யும் காமெடி கலாட்டாக்களே கதை.

Preparation for the Next Life (English) Prime - Jan 18

Preparation for the Next Life

Bing Liu இயக்கிய படம் `Preparation for the Next Life'. நியூயார்க் நகரத்தில் ஒரு ஆணின் நட்பைப் பெறும் பெண்ணின் கதை.

HIM (English) Jio Hotstar - Jan 19

Him

Justin Tipping இயக்கியுள்ள படம் `Him'. ஓர் இளம் தடகள வீரர், பயிற்சியாளராகச் செல்லும்போது என்ன நடக்கிறது என்பதே கதை.

Retta Thala (Tamil) Prime - Jan 21

Retta Thala

கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த படம் `ரெட்ட தல'. இரட்டைச் சகோதரர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது படம்.  

Tere Ishq Mein (Hindi) Netflix - Jan 22

Tere Ishq Mein

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரித்தி சனோன் நடித்த படம் `Tere Ishk Mein'. சங்கர் - முக்தியின் அழுத்தமான காதல் பற்றிய படம்.

Gustaakh Ishq (Hindi) Jio Hotstar - Jan 23

Gustaakh Ishq

நஸ்ருதீன் ஷா, விஜய் வர்மா, ஃபாத்திமா சனா சைக் நடித்த படம் `Gustaakh Ishq'. எழுத்தாளரிடம் பாடம் கற்கப் போகும் இளைஞன், அவரது மகளுடன் காதல் கொள்ள, அதன்பின் நடப்பவையே கதை.

Sirai (Tamil) Zee5 - Jan 23

Sirai

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, LK அக்ஷய்குமார் நடித்துள்ள படம் `சிறை'. ஒரு கைதியை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் காவலரின் கதை.

Shambhala (Telugu) Aha - Jan 23

Shambhala

ஆதி நடித்த படம் `Shambhala'. சம்பலா என்ற கிராமத்தின் மர்மத்தை கண்டறி முயற்சிக்கும் ஒருவனின் கதை.  

Mark (Kannada) Jio Hotstar - Jan 23

Mark

கிச்சா சுதீப் நடித்த படம் `Mark'. சஸ்பெண்ட் ஆன காவலர் அஜய் மார்கண்டேயா, தன் எதிரிகளை எப்படி அழித்தார் என்பதே கதை.

45 (Kannada) Zee5 - Jan 23

45

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்த படம் `45'. ஃபேன்டசி படமாக உருவாகியிருக்கிறது.

Mastiii 4 (Hindi) Zee5 - Jan 23

Mastiii 4

விவேக் ஓபராய், ரிதேஷ் தேஷ்முக் நடித்துள்ள படம் `Mastiii 4'. தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து தப்பிக்க நினைக்கும் மூன்று கணவர்களின் கதை.

Theatre: Chatha Pacha (Malayalam) - Jan 22

Chatha Pacha

ஆலன் ஜோபி ஜான் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் நடித்துள்ள படம் `Chatha Pacha'. ஒரு மல்யுத்த க்ளப்பில் நடக்கும் விஷயங்களே கதை.

Mankatha Re Release (Tamil) - Jan 23

Mankatha

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய சூப்பர் ஹிட் படம் `மங்காத்தா'. விநாயக் மகாதேவ் ஆடும் உள்ளே வெளியே ஆட்டமே கதை.

Draupathi 2 (Tamil) - Jan 23

Draupathi 2

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள படம் `திரௌபதி 2'. 14ம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது.

Hotspot 2 Much (Tamil) - Jan 23

Hotspot 2 Much

ஹாட்ஸ்பாட் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் நடக்கிறது. இதிலும் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல செல்லும் ஓர் இயக்குநரின் மூன்று கதைகளே படம்.

Jockey (Tamil) - Jan 23

Jockey

பிரகபால் இயக்கியுள்ள படம் `ஜாக்கி'. கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ளது படம். 

Maayabimbum (Tamil) - Jan 23

Maayabimbum

சுரேந்தர் இயக்கியுள்ள படம் `மாயபிம்பம்'. ஒரு நபருக்கு காதலால் ஏற்படும் சம்பவங்களே கதை.

Vangala Viriguda (Tamil) - Jan 23

Vangala Viriguda

குகன் சக்கரவர்த்தி இயக்கியுள்ள படம் `வங்காள விரிகுடா'. ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

Baby Girl (Malayalam) - Jan 23

Baby Girl

நிவின் பாலி நடிப்பில் அருண் வர்மா இயக்கியுள்ள படம் `Baby Girl'. ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

Magic Mushrooms (Malayalam) - Jan 23

Magic Mushrooms

நதிர்ஷா இயக்கியுள்ள படம் `Magic Mushrooms'. காதலை மையப்படுத்திய நகைசுவை படமாக உருவாகியுள்ளது.

Border 2 (Hindi) - Jan 23

Border 2

அனுராக் சிங் இயக்கத்தில் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜீத் தோசாஜ் நடித்துள்ள படம் `Border 2'. இந்தியா - பாகிஸ்தான் போரை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

Primate (English) - Jan 23

Primate

Johannes Roberts இயக்கியுள்ள படம் `Primate'. ஒரு நண்பர்கள் குழு சுற்றுலா செல்லும் இடத்தில் ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள், அவர்கள் பிழைத்தார்களா என்பதே கதை.

Marty Supreme (English) - Jan 23

Marty Supreme

Josh Safdie இயக்கியுள்ள படம் `Marty Supreme'. டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சாதிக்க நினைக்கும் மார்ட்டியின் கதை.