Anna Sawai, Kiersey Clemons, Ren Watabe நடித்த சீரிஸ் `Monarch: Legacy of Monsters'. காட்ஸில்லா - டைட்டன்ஸ் இடையேயான மோதலின் ஊடாக ஒரு குடும்பத்தின் கதையை பேசியது முதல் சீசன். இந்த முறை நடக்கும் பாதிப்புகளும், அதன் விளைவுகளும் என்ன என்பது கதை.
ப்ரியங்கா சோப்ரா, கார்ல் அர்பன் நடித்துள்ள படம் `The Bluff'. கரீபியன் தீவில் தன்னுடைய குடும்பத்தை காக்க முன்னாள் கொள்ளைக்கார பெண் எடுக்கும் முயற்சிகளே கதை.
கொங்கனா சென் சர்மா நடிப்பில் அனுபூதி காஷ்யப் இயக்கியுள்ள படம் `Accused'. புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து அவர் மீளும் முயற்சிகளே கதை.
கணேஷ் ஹெக்டே இயக்கியுள்ள படம் `Neeli Hakk'. தனது வேர்களை தேடும் ஒரு சிறுவனின் பயணமே கதை.
Scott Derrickson இயக்கிய படம் `The Black Phone 2'. முதல் பாகத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா, சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், ரெபேக்கா நடித்துள்ள படம் `தாய் கிழவி'. தங்களின் தாய் பவுனுத்தாயி உயிருக்கு போராடிக் கேட்டிருக்க, அவரது மூன்று மகன்கள் திட்டம் ஒன்றை தீட்டுகிறார்கள். பவுனுத்தாயி பிழைத்தாரா? மகன்களின் திட்டம் பலித்ததா என்பதெல்லாம் தான் கதை.
சரத்குமார் நடித்துள்ள படம் `ஆழி'. தன் மகளின் காதல் பற்றி தெரிந்து கொள்ளும் தந்தை, என்ன செய்கிறார் என்பதே கதை.
ஆரி நடித்துள்ள படம் `Fourth Floor'. அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மர்மத்தை பற்றி அறிய முயற்சிக்கும் ஹீரோவின் கதை.
ஸ்ரீ விஷ்ணு, நயன் சாரிகா நடித்துள்ள படம் `Vishnu Vinyasam'. நியூமராலஜியில் பெரிய நம்பிக்கை கொண்டுள்ள ஹீரோவின் காதல் கலாட்டாக்கள் கதை.
ரஜிஷா விஜயன் நடித்துள்ள படம் `Masthishka Maranam'. தொலைந்து போன தன் குழந்தையை நினைவுகளுடன் விர்ச்சுவல் ரியாலிட்டி உலகில் வாழும் ஒரு தந்தையின் கதை.
Neve Campbell நடித்துள்ள படம் `Scream 7'. பேய் முகமூடி அணிந்த கொலைகாரனின் அடுத்த டார்கெட் ஸ்விட்னியின் மகள். தன மகளை காக்க தாய் எப்படி போராடுகிறார் என்பதே கதை.
Kleber Mendonca Filho இயக்கத்தில் Wagner Moura நடித்துள்ள படம் `The Secret Agent'. 77ல் ஒரு ரகசிய உளவாளியின் செயல்பாடுகள் குறித்த கதை.