புனீத் பிரகாஷ் இயக்கத்தில் ஹூமா குரேஷி நடித்துள்ள சீரிஸ் `Maharani சீசன் 4'. கணவரின் உத்தரவின் பெயரில் முதலமைச்சராக மனைவி, அதன் பின் சந்திக்கும் சவால்களே கதை.
அஜய் பியூன் இயக்கியுள்ள சீரிஸ் `Thode Door Thode Paas'. தொழிநுட்பம் குடும்ப உறவுகளை எப்படி பாதித்துள்ள என்பதை மையமாக கொண்ட கதை.
Breaking Bad மட்டும் Better Call Saul தொடர்களின் இயக்குநர் Vince Gilligan இயக்கியுள்ள சீரிஸ் `Pluribus'. எழுத்தாளர் Carol Sturka, உலகத்தை பாதிக்கும் ஒரு வினோத வைரஸில் இருந்து காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளே கதை.
ஆதித்யா சுஹாஸ் இயக்கத்தில் மானவ் குணால் நடித்துள்ள படம் `Baramulla'. தொலைந்து போன ஒரு குழந்தையை கன்டுபிடிக்க முயற்சிக்கும் காவலதிகாரியின் கதை.
Guillermo del Toro இயக்கியுள்ள படம் Frankenstein. சுயநலவாதியாக சைன்டிஸ்ட் ஒருவர் தன் ஆராய்ச்சி மூலம், ஒரு அரக்கனை உருவாக்குகிறார். அதன் பின் நடப்பவையே கதை.
வர்ஷா பரத் நடித்துள்ள படம் `Bad Girl'. ஒரு பெண் தன பதின் பருவத்திலிருந்து 30 வயது வரை கடந்து வரும் உறவு சிக்கல்களை பற்றி பேசும் கதை.
The Fantastic Four படத்தின் இரண்டாவது ரீபூட் தான் The Fantastic Four: First Steps. டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஏற்ப இம்முறை நான்கு ஹீரோக்களும் மார்வல் யுனிவர்ஸ்க்குள் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.
விஜயேந்தர் இயக்கத்தில் ப்ரியதர்ஷி நடித்துள்ள படம் `Mithra Mandali'. ஒரு அரசியல்வாதியிடம் சிக்கிக்கொள்ளும் சில நண்பர்கள் செய்யும் கலாட்டாக்களே கதை.
சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம் `கிஸ்'. ஹீரோவுக்கு உள்ள ஒரு அமானுஷ்ய சக்தியால் வரும் சிக்கல்களே கதை.
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய படம் `Karam'. தேவ் தனக்கு மற்றும் அவனது குடும்பத்துக்கு வரும் ஆபத்துகளை எப்படி சரி செய்கிறான் என்பதே கதை.
சாரங் தியாகு இயக்கத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா நடித்துள்ள படம் `ஆரோமலே'. ஒரு இளைஞனுக்கு காதலை பற்றி ஏற்படும் புரிதல்களே கதை.
அலெக்ஸ் பாண்டியன் இயக்கியுள்ள படம் `கிறிஸ்டினா கதிர்வேலன்'. கிறிஸ்டினாவை காதலிக்கும் கதிர்வேலன் என்ன செய்கிறான் என்பதே கதை.
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `அதர்ஸ்'. செயற்கை கருத்தரித்தலை மையப்படுத்திய மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ளது.
அருண் பிரசாத் இயக்கியுள்ள படம் `அறிவான்'. நெய்வேலிக்கு மாற்றலாகி செல்லும் சூர்யா என்ற காவலதிகாரி பற்றிய கதை.
ஃபைசல் ராஜ் இயக்கியுள்ள படம் `பகல் கனவு'. ஊருக்குள் நிகழும் அமானுஷ்ய மரணங்களை பற்றிய கதை.
மயில் சாமியின் மகன் அன்பு மயில்சாமி நடித்துள்ள படம் `தந்த்ரா'.
கலா அல்லூரி இயக்கியுள்ள படம் `பரிசு'. ஒரு பெண்ணின் வாழ்க்கையை சொல்லும் கதை.
பித்தாக் புகழேந்தி இயக்கியுள்ள படம் `வட்டக்கானல்'. தாதா ஒருவரால் வளர்க்கப்படும் மூவர் செய்யும் விஷயங்களே கதை.
ராகுல் ரவீந்திரா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் `The Girlfriend'. ஒரு பெண் காதல் உறவால் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய படம்.
அபிஷேக் ஜெய்ஷ்வால் - வெங்கட் கல்யாண் இயக்கத்தில் சுதீர்பாபு, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் `Jatadhara'. அனந்த பத்மநாப சுவாமி கோவிலை சுற்றியுள்ள மர்மங்களை பற்றிய படமாக உருவாக்கி இருக்கிறது.
தேவன் இயக்கி நடித்துள்ள படம் `Krishna Leela'. முன் ஜென்மத்தை மையமாக கொண்ட காதல் கதை.
சதீஷ் இயக்கத்தில் அல்தாஃப் சலீம் நடித்துள்ள படம் `Innocent'. வினோத் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒரு பயத்தை எப்படி கையாள்கிறார் என்பதே கதை.
சபர்ன் வர்மா இயக்கத்தில் யாமி கௌதம், இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ள படம் `Haq'. 1985ல் நிஜமாக நடந்த Mohd. Ahmed Khan v. Shah Bano Begum வழக்கை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.
Dan Trachtenberg இயக்கத்தில் Elle Fanning நடித்துள்ள படம் `Predator: Badlands'. எதிர்காலத்தில் நடக்கும் ஒரு சர்வைவல் த்ரில்லர்.
James Vanderbilt இயக்கத்தில் Russell Crowe நடித்த படம் `Nuremberg'. ஒரு அமெரிக்க ராணுவ வீரரும், ஜெர்மானிய உளவியலாளரும் ஒரு விஷயத்தை செய்ய போராடுவதே கதை.